Breaking News

கிண்ணியாவில் கட்டாய அண்டியன் பரிசோதனை.


(கியாஸ் ஷாபி) 

கிண்ணியா சுகாதார பிரிவில்  கட்டாய ஆன்டிஜென் பரிசோதனை நேற்று (15) மேற்கொள்ளப்பட்டது.

முகக் கவசம் அணியாமல் வீதிகளில் நடமாடிவர்கள் மற்றும் சமூக இடைவெளியைப் பேணாது கடைகளில் பொருட் பொருள் கொள்வனவில் ஈடுபட்டவர்கள் இவ்வாறு பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டனர்.

ஜூலை மாதம் 1ஆம் தேதியில் இருந்து இன்று(16) வரை இந்தப் பிரதேசத்தில் மூன்று பேருக்கு மாத்திரமே கொரோனா தொற்று ஏற்பட்டிருக்கின்றது. அதேவேளை கடந்த மாதம் (ஜூன்) 94 பேர் பாதிக்கப்பட்டிருந்தனர் என்றும்

இதுவரை இந்தப் பிரதேசத்தில் 3070 பேருக்கு ஆன்டிஜென் மற்றும் பிசிஆர் பரிசோதனைகள் செய்யப்பட்டு, இருப்பதாகவும் பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி எம்.எச் எம். ரிஸ்வி தெரிவித்தார்

கொரோனா தொற்றினால் கிண்ணியா சுகாதார பிரிவில் இதுவரை மொத்தம் 501 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் இரண்டாவது அலையில் 129 பேரும் மூன்றாவது அலையில் 372 பேரும் அடங்குகின்றனர் என்றும் சுகாதார அதிகாரி மேலும் தெரிவித்தார்


 

No comments