Breaking News

கந்தளாயில் 50 குடும்பங்களுக்கு மலசலகூட வசதிகள்


கந்தளாய் பிரதேச செயலகப்பிரிவில் 59 குடும்பங்களுக்கு மலசல கூட வசதிகள் ஏற்படுத்தி கொடுப்பதற்கான அனுமதிக்கடிதங்கள் வழங்கி வைக்கும் நிகழ்வு இன்று (17) கந்தளாய் பிரதேச செயலகத்தி்ல் திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் மாவட்ட ஒருங்கிணைப்புக்குழுவின் இணைத்தலைவருமான கபில நுவன் அத்துக்கோரல தலைமையில் நடைபெற்றது.

பயனாளி ஒருவருக்கு மலசலகூடமொன்றை அமைக்க 69000 ரூபா அரசாங்கத்தினால் வழங்கப்படவுள்ளது. மூன்று கட்டங்களாக வழங்கப்படவுள்ள இந்நிதியுதவியை பெற்று தமது பங்களிப்பையும் வழங்கி இதனை நிர்மாணித்தல் வேண்டும்.
திருகோணமலை மாவட்ட அபிவிருத்தியை அடிப்படையாக கொண்டு தற்போது பல வேலைத்திட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டு வருவதாகவும் இதன்மூலம் மாவட்ட அபிவிருத்தியை மேற்கொண்டு மக்களின் வருமானத்தை உயர்த்தி வாழ்க்கைத்தர மேம்பாட்டை ஏற்படுத்துவதே இதன் மூல நோக்கமாகும் என்று இதன்போது அரசாங்க அதிபர் சமன் தர்சன பாண்டிகோராள தெரிவித்தார்.
கொவிட் வைரசுக்கு மத்தியில் ஜனாதிபதி தலைமையிலான எமது அரசாங்கம் ஏனைய உலக நாடுகளிலும் பார்க்க சிறப்பான முறையில் வைரசை கட்டுப்படுத்தி நாட்டை அபிவிருத்தி செய்யும் காத்திரமான பணியை தற்போது மேற்கொண்டு வருகின்றது. இன்று திருகோணமலை மாவட்டத்தில் பாரிய அபிவிருத்தி செயற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.இவை யாவும் மாவட்ட மக்களின் நலன்கருதியே ஆகும். எனவே மக்கள் தமது பிரதேச அபிவிருத்தி மற்றும் எதிர்கால நலனை கருத்திற்கொண்டு தற்போதைய அரசாங்கத்திற்கு ஒத்துழைப்பு வழங்குமாறு இதன்போது மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் ஒருங்கிணைப்புக்குழுவின் இணைத்தலைவருமாகிய கபில நுவன் அத்துக்கோராள தெரிவித்தார்.
இந்நிகழ்வில் மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் கே.பரமேஸ்வரன், கந்தளாய் பிரதேச செயலாளர் என்.எம்.உபேக்சா குமாரி ,பிரதேச அரசியல் தலைமைகள் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.

No comments