Breaking News

திருகோணமலையில் சௌபாக்கிய உற்பத்தி கிராமத்துக்கு உபகரணங்கள் வழங்கி வைப்பு

 




( கியாஸ் ஷாபி )

திருகோணமலை மாவட்ட தம்பலகமுவ பட்டினிபுர சௌபாக்கிய உற்பத்தி கிராம பயனாளிகளுக்கு விவசாய உபகரணங்களும் விதைகளும் வழங்கி வைக்கப்பட்டன. 

இதற்கான நிகழ்வு நேற்று(17) தம்பலகாமம் பிரதேச செயலகத்தில் நடைபெற்றது.

திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவருமான கபிலா நுவான் அதுக்கோரல மற்றும் மாவட்ட செயலாளர் சமன் தர்ஷனா பான்டிகோரல ஆகியோர் பயனாளிகளுக்கு இதனை வழங்கி வைத்தனர்.

இதன்போது 9.9 மில்லியன் ரூபா செலவில் சௌபாக்கிய உற்பத்தி கிராம திட்டத்தின் கீழ், நிலக்கடலை, நீர் குழாய்கள் போன்றன வழங்கப்பட்டன.

கிராமத்தில் உள்ள குடும்பங்களின் வருமானத்தை அதிகரித்து , நாட்டின் பொருளாதாரத்திற்கு பங்களிப்பு செய்வதும் மற்றும் அப்பகுதி மக்களை தொழில்முனைவோராக மாற்றுவதுமே இத்திட்டத்தின் நோக்கமாகும்.

இந்த நிகழ்வில் திருகோணமலை , மாவட்ட அலுவலகத்தின் திட்டமிடல் பணிப்பாளர் கே.எஸ். திருமதி பரமேஸ்வரன், தம்பலகமுவ பிரதேச செயலாளர். த ஸ்ரீபதி, உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள் , பிற அரச அதிகாரிகள் மற்றும் பயனாளி குடும்பங்களின் உறுப்பினர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

No comments