Breaking News

மட்டக்களப்பில் உலர் உணவு பொதிகள் வழங்கி வைக்கப்பட்டன



கொவிட் 19 தொற்று பரவல் காரணமாக வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ள கணவனை இழந்த, பெண்கள் தலைமை தாங்கும் குடும்பங்கள், மற்றும் விசேட தேவையுடையவர்களுக்கான உலர்வுணவு பொதிகள் நேற்று (22) வழங்கிவைக்கப்பட்டன.

கிழக்கு சமூக அபிவிருத்தி மையமாக கிழக்குமாகாணத்தில் இயங்கி வரும் தன்னார்வ தொண்டு நிறுவனமானது மட்டக்களப்பு மாவட்டத்தில் வறுமைக்கோட்டின் கீழ் வாழ்கின்ற குடும்பங்களின் வாழ்வாதாரம் மேம்படுத்தும் வகையில் மனிதநேய பணிகளை முன்னெடுத்து வருகின்றது,

மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள அசாதார நிலை காரணமாக வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ள குடும்பங்களின் கணவனை இழந்த, பெண்கள் தலைமை தாங்கும் குடும்பங்கள், மற்றும் விசேட தேவையுடையவர்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கும் நோக்கில் மட்டக்களப்பு மாவட்ட செயலகத்துடன் இணைந்து மாவட்ட அரசாங்க அதிபர் கே.கருணாகரனின் ஆலோசனையின் கீழ் மாவட்டத்தின் 14 பிரதேச செயலக பிரிவுகளில் தெரிவு செய்யப்பட்டவர்களுக்கு சுமார் 30 இலட்சம் பெறுமதியான உலர்வுணவு பொதிகள் வழங்கி வைக்கப்பட்டன.  


கிழக்கு சமூக அபிவிருத்தி மையத்தின் பணிப்பாளர் எம்.எல்.புகாரி மொஹமட் தலைமையில் மட்டக்களப்பில் நடைபெற்ற நிகழ்வில் மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் வி.வாசுதேவன் கலந்துகொன்டு உலர்வுணவு பொதிகளை வழங்கி வைத்தார் இந்நிகழ்வில் கிழக்கு சமூக அபிவிருத்தி மையத்தின் உத்தியோகத்தர்கள் கலந்துகொண்டு உலர்வுணவு பொதிகளை வழங்கியிருந்தமை குறிப்பித்தக்கது.

No comments