கிண்ணியா பிரதேச செயலக நடமாடும் சேவையினை நடாத்துமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது!
கிண்ணியா பிரதேச சபை எல்லைக்குள் கிண்ணியா பிரதேச செயலக நடமாடும் சேவையினை வாரத்தில் இரண்டு நாட்கள் நடாத்துமாறு கோரி கிண்ணியா மஜ்லிஸ் அஷ் ஷூரா சபையினால் இன்று(23) கிண்ணியா பிரதேச செயலாளர் எம்.எச். முகம்மது கனியிடம் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது.
இதற்கான நிகழ்வு இன்று (23) கிண்ணியா பிரதேச செயலகத்தில் கிண்ணியா மஜ்லிஸ்அஷ் ஷுரா சபை தலைவர் ஏ. ஆர். எம். பரீட் தலைமையில் நடைபெற்றது.
இவ்வாறானதொரு நடமாடும் சேவையினை ஏன் நடாத்த வேண்டும் என்பதற்கான பல காரணங்கள் அந்த அறிக்கையில் சுட்டிக் காட்டப்பட்டிருக்கின்றன.
கிண்ணியா பிரதேச செயலகம் ஆனது 31 கிராம சேவகர் பிரிவுகளை உள்ளடக்கியுள்ளது. இதில் 17 கிராம சேவையாளர் பிரிவுகள் கிண்ணியா நகரசபை பகுதியிலும் 14 கிராம சேவையாளர் பிரிவுகள் கிண்ணியா பிரதேச சபை எல்லைக்குள்ளும் அமைந்துள்ளன.
சுமார் 25000 குடும்பங்களையும் 90,000 வரையான மக்கள் தொகையையும் கிண்ணியா பிரதேச செயலகப் பிரிவு உள்ளடக்கியுள்ளது.
இதில் 11 ஆயிரம் குடும்பங்களையும் 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சனத்தொகையும் கிண்ணியா பிரதேச சபை கொண்டுள்ளது
எனவே, இந்தப் பிரதேசத்தில் வாழும் மக்களின் நிர்வாக ரீதியான இடர்பாடுகளை தீர்ப்பதற்கும் அவர்களின் கல்வி, சுகாதாரம், போக்குவரத்து, பொது சுகாதாரம், வாழ்கை தரம், மற்றும் பல்வேறு காரணிகளால் கிண்ணியா பிரதேசத்திற்கு வந்து இவர்கள் தமது சேவையினை பெற்றுக் கொள்வதற்கு ஏற்படுகின்ற சிரமங்களை தவிர்ப்பதற்காகவும் வாரத்தில் இரண்டு நாட்கள் பிரதேசசபை பிரிவுகளை உள்ளடக்கியதான கிண்ணியா பிரதேச செயலகத்தின் நடமாடும் சேவையினை மிக விரைவாக ஆரம்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
இந்த நிகழ்வில் கிண்ணியா பிரதேச செயலக உதவிச் செயலாளர், கிண்ணியா பிரதேச சபை தவிசாளர், குறிஞ்சாகேணி சுகாதாரப் பிரிவு வைத்திய அதிகாரி, கிண்ணியா பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி, உதவி திட்டமிடல் பணிப்பாளர், பாராளுமன்ற உறுப்பினர்களின் பிரதிநிதிகள் மற்றும் கிண்ணியா மஜ்லிஸ் ஷுரா உறுப்பினர்கள் பலரும் கலந்து கொண்டனர். www.newstimetamil.com
Vedio









No comments