Breaking News

கிண்ணியா வலய பாடசாலை மாணவர்களுக்கு டெப் கணினிகள் வழங்கிவைப்பு


(கியாஸ் ஷாபி)

பாடசாலைகளில் கற்றல் கற்பித்தல் செயல்முறையை அபிவிருத்தி செய்யும் நோக்கில் அரசாங்கத்தால் அறிமுகப்படுத்தப்பட்ட டிஜிட்டல் தொழில்நுட்ப முறையிலான கற்றல் செயற்பாடுகளுக்காக மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் டெப் கணனிகள் வழங்கும் வைபவம் நேற்று (24) கிண்ணியா வலயக் கல்வி அலுவலகத்தில் நடைபெற்றது.

இதற்காக கிண்ணியா வலயத்திலிருந்து முதற்கட்டமாக 13 பாடசாலைகள் தெரிவு செய்யப்பட்டு, மொத்தம் 781டெப் கணினிகள் வழங்கப்பட்டன. இதில் 700 கணினிகள் மாணவர்களின் பாவனைகாகவும் ஆசிரியர்களின் பாவனைக்காக 81 டெப் கணினிகளும் வழங்கப்பட்டன.


கிண்ணியா வலயக் கல்விப் பணிப்பாளர் ஏ. நசூகர்கான் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில், திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் திருகோணமலை மாவட்ட அபிவிருத்தி குழுவின் இணைத் தலைவருமான கபிலநுவான் அதுகோரால அதிதியாக கலந்துகொண்டு இவற்றை வழங்கி வைத்தார்.


இதன்போது உரையாற்றிய பாராளுமன்ற உறுப்பினர் ஒன்று கடவுள் ஆக இருங்கள் அல்லது ஆசிரியர்களாக இருங்கள் என ஒரு முதுமொழி இருக்கின்றது. இங்கு ஆசிரியர்கள் கடவுளுக்குச் சமமான மதிக்கப்படுகிறார்கள் இதன் காரணமாகவே பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து ஆர்ப்பாட்டம் செய்கின்ற ஆசிரியர்களோடு பேச்சுவார்த்தை நடத்துவதற்கு அரசாங்கம் எப்பொழுதும் தயாராக இருக்கின்றது.

ஆசிரியர்களுடைய அனைத்துப் பிரச்சினைகளும் எமது ஆட்சிக்காலத்திலேயே தீர்த்து வைக்கப்படும் என்பதை உறுதியாக தெரிவித்துக்கொள்ள விரும்புகிறேன் என்று தெரிவித்தார்.

இதன்போது கிண்ணியா வலயக் கல்வி அலுவலகம் தற்போது எதிர்நோக்கியிருந்த பல்வேறு குறைபாடுகள் குறித்து, தயாரிக்கப்பட்ட மகஜர் ஒன்றும் வலயக் கல்விப் பணிப்பாளரால் நாடாளமன்ற உறுப்பினரிடம் கையளிக்கப்பட்டது.



No comments