Breaking News

கிழக்கு மாகாணத்தின் கொரோனா நிலவரம்!

கிழக்கு மாகாணத்தில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கையில் திடீர் அதிகரிப்பு; மக்களை அவதானமாக இருக்க கூறுகிறார் சுகாதார பணிப்பாளர்  

(கியாஸ் ஷாபி) 

தேசிய ரீதியில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவது போல் கிழக்கு மாகாணத்திலும் கடந்த சில தினங்களாக தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதை அவதானிக்க கூடியதாக இருக்கிறது. இதன் காரணமாக மக்கள் அவதானமாக இருக்க வேண்டும் என கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் ஏ. ஆர்.எம். தௌபீக் தெரிவித்தார்.

கிழக்கு மாகாணத்தின் தற்போதைய கொரோனா நிலவரம் குறித்து, நேற்று (29) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர், இவ்வாறு தெரிவித்தார்.

இது தொடர்பாக அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,

கடந்த 24 மணி நேரத்தில் கிழக்கு மாகாணத்தில் மொத்தம் 290 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர் என்றும் இதில் கல்முனை பிராந்திய சுகாதார பிரிவில் 30 பேரும் திருகோணமலை பிராந்திய சுகாதாரப் பிரிவு 40 பேரும் மட்டக்களப்பு பிராந்திய சுகாதார பிரிவில் 119 பேர் அம்பாறை பிராந்திய சுகாதாரப் பிரிவு 101 பேரும் அடங்குகின்றனர்.

கடந்த இரு வாரங்களுக்கு முன்னர் கிழக்கு மாகாணத்தில் தொற்றாளர்களின் எண்ணிக்கையில் ஏற்பட்ட சிறு வீழ்ச்சியை சாதாரணமாக எடுத்துக் கொண்டு, பொதுமக்கள் தங்களது பாதுகாப்பில் கவனயீமாக இருந்ததால் இந்த எண்ணிக்கையில் அதிகரிப்பு ஏற்பட்டிருக்கலாம் என பணிப்பாளர் தெரிவித்தார்.

இது தொடர்பாக மேலும் அவர் கூறுகையில் மேல் மாகாணத்தில் சில இடங்களில் திரிபடைந்த டெல்டா ஆதிக்கம் செலுத்தி வருவதால் அது கிழக்கு மாகாணத்திலும் பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய வாய்ப்பு இருக்கின்றது என்றும் தெரிவித்தார்.

கிழக்கு மாகாணத்தில் தடுப்பூசி நிலவரம் தொடர்பாக சுகாதாரப் பணிப்பாளர் மேலும் கருத்து தெரிவிக்கையில், 

கொரோனாவின் தாக்கத்தையும் பரவல் வேகத்தை கட்டுப்படுத்துவதற்கு அரசாங்கத்தினால் 30 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசியை எடுத்துக்கொள்வது அவசியமாகும்.

தற்போது கிழக்கு மாகாணத்தில் சகல பகுதிகளிலும் தடுப்பூசி வழங்கும் ஏற்பாடுகள் மும்முரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

அம்பாறை பிராந்திய சுகாதார பிரிவுக்கு இதுவரை 1,35,000 தடுப்பூசிகளும் மட்டக்களப்பு பிராந்திய சுகாதார பிரிவுக்கு 2,75,000 தடுப்பூசிகளும் திருகோணமலை பிராந்திய சுகாதார பிரிவுக்கு 1,75,000 தடுப்பூசிகளும் கல்முனை பிராந்திய சுகாதார பிரிவுக்கு 1,90,000 தடுப்பூசிகளும் வழங்கப்பட்டுள்ளன.

அம்பாறை பிராந்திய சுகாதார பிரிவில் இதுவரை 1,10,000 பேருக்கு முதலாவது டொஸ் வழங்கப்பட்டுள்ளது. இங்கு 24,949 பேருக்கு இரண்டாவது டொஸ்சும் வழங்கப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு பிராந்திய சுகாதார பிரிவில் இதுவரை 1,74,935 பேருக்கு முதலாவது டொஸ் வழங்கப்பட்டுள்ளது. இங்கு 100,065 பேருக்கு இரண்டாவது டொஸ்சும் வழங்கப்பட்டுள்ளது.

திருகோணமலை பிராந்திய சுகாதார பிரிவில் இதுவரை 1,50,186 முதலாவது டொஸ் வழங்கப்பட்டுள்ளது. இங்கு 24,814 பேருக்கு இரண்டாவது டொஸ்சும் வழங்கப்பட்டுள்ளது.

இதேபோன்று கல்முனை பிராந்திய சுகாதார பிரிவில் நேற்று(29) மாத்திரம் 42,846 பேருக்கு தடுப்பு ஊசி செலுத்தப்பட்டு இருக்கின்றன. மொத்தமாக இங்கு 92,846 பேருக்கு முதலாவது டொஸ் வழங்கப்பட்டுள்ளது.

கல்முனையை பொறுத்தவரையில், கடைசியாக தடுப்பூசிகள் இங்கு கிடைக்கப்பெற்றாலும், தடுப்பூசி வழங்கப்பட எதிர்பார்ப்போரில் 40 வீதமானோருக்கு இந்த பிராந்தியத்தில் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன என்றும் தெரிவித்தார்

No comments