தம்பலகாமம் பிரதேசத்தில் “வீட்டுக்கு வீடு கப்ருக”
தென்னங் கன்றுகள் 40 லட்சம் நடும் நடும் தேசிய வேலைத்திட்டமான “வீட்டுக்கு வீடு கப்ருக” என்ற திட்டம் நேற்று (10. 07. 2021) தம்பலகாமம் பிரதேசத்தில் தாயிப் நகர் கிராமத்தில் பாராளுமன்ற உறுப்பினர் எம். எஸ். தௌபீக்கினால் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
இதன்போது முதற்கட்டமாக இக்கிராமத்தில் 40 பயனாளிகளுக்கு 5 தென்னங் கன்றுகள் வீதம் வழங்கப்பட்டுள்ளது.
இந்நிகழ்வில் பிரதேச சபை உறுப்பினர்கள், தென்னைப் பயிர்ச்செய்கை சபை உத்தியோகத்தர் மற்றும் பிரதேச செயலக உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டனர்.








No comments