பஸ்ஸில் பயணித்த பெண் மரணம்!
பேருந்தில் பயணித்த பெண் ஒருவர் இருக்கையில் இறந்துள்ளதாக பாணந்துறை தெற்கு பொலிஸார் தெரிவிப்பு !
ஹரணையில் இருந்து பாணந்துறைக்கு இன்று மாலை பேருந்தில் பயணித்த பெண் ஒருவர் தனது இருக்கையில் இறந்துள்ளதாக பாணந்துறை தெற்கு பொலிஸார் தெரிவித்தனர்.
தூங்கிக் கொண்டிருப்பதாக நினைத்து சந்தேகத்தில் பெண்ணை பேரூந்து நடத்துனர் விசாரித்துள்ளார். எனினும் பின் இறந்துள்ளார் என தெரிந்ததால் பேருந்திலேயே பாணந்துறை மருத்துவமனைக்கு இறந்தவரின் உடல் கொண்டு செல்லப்பட்டுள்ளது.
சுமார் 60 அல்லது 65 வயதிற்குட்பட்ட அந்த பெண் பற்றி தமக்கு தகவல் எதுவும் கிடைக்கவில்லை என்று பொலிஸார் கூறுகின்றனர்.






No comments