துர்நாற்றம் வீசுகிறது!!
பேராற்றுவெளி மையவாடி பகுதியைச் சுற்றியுள்ள வீதிகளில் துர்நாற்றம் வீசுவதால் மக்கள் நடமாட முடியாது.
(முகம்மது யூசுப்)
திருகோணமலை மாவட்டத்தில் கந்தளாய் பேராற்றுவெளி மையவாடியின் சுற்றுச்சூழல் பகுதி குப்பை கூளங்களால் அசுத்தப்படுத்தப்பட்டிருப்பதாக பொதுமக்களும் பாதசாரிகளும் விசனம் விசனம் தெரிவிக்கின்றனர்.
கந்தளாய் பிரதேச சபைக்குட்பட்ட பேராற்றுவெளி ஜும்மா முஸ்லிம் பள்ளிவாயலுக்கு சொந்தமான இந்த மைய வாடியைச் சுற்றி மதில் அமைக்கப்பட்டிருக்கின்றது. இந்த மதில் ஓரங்களில் இந்த மையவாடியை அண்டி வசிப்பவர்கள் தங்களுடைய வீட்டு குப்பை கூளங்களையும் ஏனைய கழிவுகளையும் நாளாந்தம் வீசுவதால் இந்த பிரதேசம் இவ்வாறு அசுத்தப்படுத்தப்பட்டிருக்கிறது.
மக்களின் இந்த செயற்பாடு, இந்த மையவாடி அமைந்த சுற்றாடலை அசுத்தப்டுத்திருப்பது மாத்திரமன்றி, சுற்றியுள்ளவர்களால் வீசப்படும் வீட்டு உணவு கழிவுகளால் துர்நாற்றம் வீசுவதாகவும் பாதசாரிகள் விசனம் தெரிவிக்கின்றனர்
இது தொடர்பாக பேராற்றுவெளி ஜும்மா பள்ளிவாயல் நிர்வாகத்திடம் கேட்டபோது,
இவ்வாறு கொட்டப்படுகின்றன குப்பை கூளங்களை அகற்றுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அங்கு தொடர்ந்தும் கழிவுகளை கொட்டுபவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் கந்தளாய் பிரதேச சபைக்கு எழுத்து மூலம் எமது கோரிக்கைகளை அறிவித்துள்ளோம். ஆனால் எந்தவிதமான நடவடிக்கைகளும் இது தொடர்பாக அவர்கள் மேற்கொள்ளவில்லை என்று தெரிவிக்கின்றனர்










No comments