Breaking News

கிண்ணியா மக்களுக்கு எச்சரிக்கை!


அதிகரித்துவரும் கொரோனாதொற்று குறித்து கிண்ணியா சுகாதார வைத்திய அதிகாரி மக்களுக்கு எச்சரிக்கை!

(கியாஸ் ஷாபி) 

தற்போது நாடளாவியரீதியில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கையும் மரணங்களும் நாளுக்குநாள் அதிகரித்துவருகின்ற நிலையில் கிண்ணியா பிரதேசத்திலும் தொற்றாளர் எண்ணிக்கையிலும் அதிகரிப்பு ஏற்பட்டுவருவது கவலைக்குரியவிடயமாகும்  என பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் எம். எச். எம். றிஸ்வி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,

எமது சுகாதார அலுவலகத்தால் நேற்று (19) 36 பேருக்கு மேற்கொள்ளப்பட்ட அன்டிஜென் பரிசோதனையில் 14 பேர் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இதில் இடிமண் கிராம சேவகர் பிரிவில் 11 பேரும் குறிஞ்சாகேணி பகுதியைச் சேர்ந்த இருவரும் வங்கி ஊழியர் ஒருவரும் அடங்குகின்றனர். 

தொற்றாளர்கள் அதிகரித்துவரும் இக்காலகட்டத்தில் வைத்தியசாலைகளில் ஒக்சிஜன் தட்டுப்பாடு வரக்கூடிய அபாயநிலைமை அவதானிக்கக்கூடியதாகவுள்ளது. 

எனவே இனிமேலாவது நாம் அனைவரும் எமது அலட்சியப்போக்கினைவிடுத்து அத்தியவசிய தேவைக்காகமாத்திரம் சுகாதாரவிதிமுறைகளுடன் வெளியில் நடமாடுவதன் மூலமும் ஏனைய நேரங்களில் வீட்டிலிருந்து பாதுகாப்பு பெறுவதன் மூலமும் கொடிய கொரோனா மரண அபாயத்திலிருந்து எங்களை நாங்களே பாதுகாத்துக் கொள்ள வேண்டும் . 

ஒவ்வொரு தனிநபரும் பொறுப்புணர்ந்து நடந்துகொள்வதால் மாத்திரமே கொரோனா தொற்றை இல்லாதொழிக்க முடியும் என்றும் தெரிவித்தார்.



No comments