Breaking News

கிண்ணியா தள வைத்தியசாலைக்கு புதிய வைத்திய அத்தியட்சகர்!

   

(கியாஸ் ஷாபி) 

வைத்தியர்களின் வருடாந்த இடமாற்ற திட்டத்தின் கீழ், கிண்ணியா தள வைத்தியசாலையின் புதிய வைத்திய அத்தியட்சகராகக் (medical Superintendent) அட்டாளைச்சேனையைச் சேர்ந்த ஐ. எம். ஜவாஹிர் நேற்று (18) கடமையை பொறுப்பேற்றுக்கொண்டார்.

இவரது வருகையை  வைத்தியசாலை அபிவிருத்திக் குழு  வரவேற்று இருப்பதோடு , இவரது சேவைக் காலப்பிரிவில் கிண்ணியா தள வைத்தியசாலை பாரிய வளர்ச்சியைக் காணும் என்ற நம்பிக்கையையும் வெளியிட்டிருக்கிறது.

இதேவேளை,வைத்திய அத்தியட்சகராக இதுவரை காலமும்  கடமையாற்றிய  டாக்டர்
ஏ.எம்.ஏ. ஜிப்ரி இந்த  வைத்தியசாலையின் அபிவிருத்திக்கும் முன்னேற்றத்துக்கும் மிகச் சிறப்பாக சேவையாற்றியவர் என்றும், அவரது சேவை இந்த வைத்தியசாலைக்கு தொடர்ந்து தேவை என்றும் வைத்தியசாலை அபிவிருத்தி குழு தெரிவித்துள்ளது.















No comments