உதிரம் வழங்கி உயிர் காப்போம்!
நாட்டில் தற்போதைய அசாதாரண சூழ்நிலை காரணமாக இரத்த வங்கியில் நிலவும் இரத்தப் பற்றாக்குறையை தீர்ப்பதற்காக தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தினால் நேற்று(18) புத்தளம் பிரதேச செயலகத்தில் இரத்ததான முகம் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டது.
இதில் புத்தளம் வாழ் மக்கள், அரச உத்தியோகத்தர்கள், இளைஞர்கள், படையினர் ஆகியோர் கலந்து கொண்டு இரத்த தானம் செய்தனர்.
இதன்போது 120க்கும் அதிகமானோர் இரத்த தானம் செய்ய வந்தமை குறிப்பிடத்தக்கது.
இந்த நிகழ்வினை புத்தளம் பிரதேச செயலாளர் S.A.Y.R. ஜயதிலக அனைத்து ஏற்பாடுகளையும் சிறப்பாக செய்திருந்தார்.
இந்நிகழ்வுக்கு தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தோடு இணைந்து புத்தளம் பிரதேச செயலகம், புத்தளம் பிரதேச இளைஞர் கழக சம்மேளனம் மற்றும் ரம்ய லங்கா நிறுவனம் ஆகியனவும் இணைந்து கொண்டன..





No comments