கொவிட் பரவலை கட்டுப்படுத்த அவசரமாக செய்ய வேண்டிய காரியங்கள்
(அஷ்ஷெய்க் S.H.M.பளீல்)
திருமண வைபவங்கள் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும். நிகாஹ் செய்ய வேண்டி வந்தால் அதில் கூடியது 10 பேர் அளவு கலந்து கொண்டால் போதுமானது. அங்கும் சமூக இடைவெளி கண்டிப்பாக கடைபிடிக்கப்பட வேண்டும்.
ஜனாஸா வீடுகளுக்கு வெளியார் செல்வதை தவிர்த்துக் கொள்ள வேண்டும். நெருங்கிய உறவினர்கள் மாத்திரம் ஜனாஸாவின் கடமைகளைக் கவனித்தால் போதுமானது. அப்போதும் சுகாதார விதிகளை உயர்த்த பட்சம் கடைபிடிக்க வேண்டும். மற்றையோர் ஜனாஸாவுக்காக துஆச் செய்யலாம்.
இலங்கையிலுள்ள அனைத்து பள்ளிவாசல்களிலும் கூட்டுத் தொழுகையை இடைநிறுத்த வேண்டும்.
உறவினர்களது வீடுகளுக்கோ நண்பர்களது வீடுகளுக்கோ செல்லுவதை முற்று முழுதாகத் தவிர்க்க வேண்டும்.
இளைஞர்கள், சிறுவர்கள் ஒன்றாக கூடி விளையாடுவதையும் கதைத்துக் கொண்டிருப்பதையும் அயல் வீடுகளுக்கு செல்வதையும் முற்றுமுழுதாக நிறுத்தவேண்டும்.
நிர்ப்பந்தமான சூழ்நிலையில் வேறு ஒருவரை சந்திக்க நேரிடும் பொழுது
இரண்டு மீட்டர் இடைவெளி பேண வேண்டும்.
மாஸ்க்கை முறையாகவும் இறுக்கமாகவும் அணிந்துகொள்ள வேண்டும்.
கை குலுக்குவதை தவிர்க்க வேண்டும்.
சந்திப்பின் நேர அளவை இயன்ற வரை குறைத்துக் கொள்ள வேண்டும்.
கை கழுவிக் கொள்ளாமல் வாய், மூக்கு, கண், காது என்பவற்றை தொடுவதை முற்றுமுழுதாக தவிர்த்துக் கொள்ள வேண்டும்.
தடிமன், காய்ச்சல், இருமல் போன்ற அறிகுறிகள் இருப்பவர்கள் எக்காரணத்தை முன்னிட்டும் வீட்டை விட்டு வெளியேறுவதை தவிர்ப்பதோடு அத்தகையோர் சுயகட்டுப்பாட்டோடு வீட்டில் தம்மைத் தாமே தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும்.
இவை அனைத்தையும் செய்வதோடு
✓ பாவங்களை முற்றுமுழுதாக தவிர்க்க வேண்டும்
✓ வீட்டில் இருக்கின்ற பொழுது ஐவேளைத் தொழுகை, இஸ்திக்பார், திலாவதுல் குர்ஆன், சுன்னத்தான ஏனைய அமல்கள் என்பவற்றில் கவனமாக ஈடுபட வேண்டும்.
✓ சமூக ஊடகங்கள் வாயிலான கல்வி, சமூக சேவை, தஃவா பணி, நூல்களை வாசிப்பது, வீட்டாருடன் இணைந்து அமல்களிலும் கற்றல் கற்பித்தலிலும் சம்பந்தப்படுவது போன்ற போன்ற பயனுள்ள காரியங்களில் ஈடுபட வேண்டும்.
✓ வீட்டில் இருக்கின்ற பொழுது நிறைவான உணவுப் பழக்க வழக்கங்கள், உடற்பயிற்சி, வீட்டாரோடு நல்லுறவு, வீட்டு வேலைகள், நல்ல சுகாதாரப் பழக்க வழக்கங்கள் போன்றவற்றை கைக்கொள்ள வேண்டும்.
✓ வீட்டில் இருந்த வண்ணம் உழைப்பு முயற்சிகளில் ஈடுபட முடிந்தவர்கள் அவற்றில் ஈடுபடலாம்.
👉 அதிக தூக்கம் அளவு மீறிய உணவு, அளவு மீறிய ஊடகப் பாவனை என்பன தவிர்க்கப்பட வேண்டும்.
இவை அனைத்தையும் உயர்ந்த பட்சம் செய்த பின்னர்
அல்லாஹ்வின் மீது பொறுப்புச்சாட்டிவிட்டு அவன் எழுதியதே நடக்கும் என்ற உண்மையான நம்பிக்கையுடன் பொறுமையாக இருப்பதே முஃமின்களது பண்பாகும்.
#முறையான ஒழுங்கு அல்லது சமன்பாடு:-
இஸ்லாத்தின் வரம்புக்கு உட்பட்ட முழுமையான முயற்சிகள்+
அல்லாஹ் மீதான முழுமையான விசுவாசமும் இக்லாஸும்+
பொறுமையும் தவக்குலும்= இஸ்லாம்
وَٱلَّذِينَ جَٰاهَدُواْ فِينَا لَنَهْدِيَنَّهُمْ سُبُلَنَا ۚ وَإِنَّ ٱللَّهَ لَمَعَ ٱلْمُحْسِنِينَ (العنكبوت-٦٩)
"And those who strove in Our way - We shall surely show them Our paths; and indeed Allah is with the virtuous."(29:69)
"மேலும் எவர்கள் நம்முடைய வழியில் முயல்கின்றார்களோ நிச்சயமாக அவர்களை நம்முடைய நேரான வழிகளில் நாம் செலுத்துவோம்; நிச்சயமாக அல்லாஹ் நன்மை செய்வோருடனேயே இருக்கின்றான்."(29:69)






No comments