மங்காத நாமம் மங்கள
மங்கள,
மங்களமான பெயர்.
பெரும்பான்மைக்குள் இருந்து கொண்டே சிறுபான்மைக் குரலாக ஒலித்தாய்.
மங்களமான பெயர்.
பெரும்பான்மைக்குள் இருந்து கொண்டே சிறுபான்மைக் குரலாக ஒலித்தாய்.
முழு மொத்த மானிடத்தின்
அடையாளமாய் சிலிர்த்தாய்.
பெருந் தொற்றுக் காவு கொண்ட
நல்லாத்மாக்களில் நீயுமொருவனாய் இருப்பாயென கொஞ்சமேனும் நினைக்கவில்லை நாம்.
நீ தொற்றடைந்த போதுனக்காய் பிரார்த்தனைகள் வந்த போதே
புரிந்து கொண்டேன்,
எத்தனை மனித மனங்களை நீ
வென்றிருக்கிறாய் என்று.
எமக்காகப் பேச உன் போன்றவர்கள்
இருக்க வேண்டிய தருணத்தில்
கொரோனா எனும் கொடிய வைரஸ்
உனைக் காவு கொண்டு போனமைதான் பெரும் துயரம்.
சமூக நீதிக்காய் ஒலித்த குரல்
இனி ஒலிக்காது எனும் போது
எம் மனது கனக்கிறது.
மௌனித்துப் போனதுந்தன்
இனவாதத்திற்கு எதிரான
கம்பீரக் குரல் மட்டுமல்ல,
நல்ல மானுடத்தினதும் இன நல்லுறவினதும் அடையாளமும் தான்.
இனவாதம் இருக்கும் வரை
உருப்படாது இந்த தேசமென
உரத்துச் சொன்னவன் நீ,
இத்தனை சீக்கிரமாய்
புறப்பட்டுப் போனதேனோ?
இனவாதக் கொடுங் கரங்கள்
மரணித்த எம் உறவுகளைத் தீயிட்டு எரித்தபோது இனத்துவ அடையாளத்தைத் தூங்கியெறிந்து விட்டு
வெள்ளைத் துணி கட்டி எம்
கபன் சீலைத் துண்டுக்காய்
கை கொடுத்தவன் நீ,
தென்னிலங்கை பெற்றெடுத்த பெருமகனே,
அரசியலை அலங்கரித்த ஆளுமையே,
மங்கள எனும் உந்தன் திரு நாமம்
இலங்கை அரசியலில்
மங்காதே ஒருபோதும்.
www. news time tamil. com







No comments