கொரோனாக்கு கோரநாக்கு!!
- கிண்ணியா தீர்ப்பாயம் -
மங்கள சமர வீர
முன்னைநாள் அமைச்ச; நாட்டில்
உங்களை மறப்ப தாரு
உயர்சேவை மறுப்பதாரு!
முன்னைநாள் அமைச்ச; நாட்டில்
உங்களை மறப்ப தாரு
உயர்சேவை மறுப்பதாரு!
சிங்கள தமிழ பேதச்
சறுபான்மை பாகுபாடு
உங்களில் இருந்ததில்லை
உயர் குணம் மணக்கும் முல்லை!
இயல்பாக மனித நேயம்
இதயத்தில் சுமந்தீர் ஐயா!
சுயநாலபமற்ற சேவை
தொடர்வது உலகப் பொய்யா?
கொரோணாக்கு கோரநாக்கு
கொடுமையை எதிர்த்த நாக்கு-உயிர்
பெறாமலே விடைபெற்றாச்சு
புதுத் தேசம் கேள்வியாச்சு!
நாட்டுப்பற்றொன்றை மட்டும்
நேசிப்பார்க்குயர்வு கிட்டும்
தோற்றதுவோ சமுதாயம்தான்-உங்கள்
தீடீர் மறைவு பெருங்காயந்தான்!
சாந்தியின் மங்களத்தைப்
தாங்கிய மங்களவை
காந்தியின் தம்பியென்றே
கண்ணீரால் வர்ணிக்கின்றோம்!
இறைமையின் நீதம் காத்தீர்
இறைசெயல் என்ன செய்வோம்!
நிறை குணட் தூயவர்க்கெம்
நன்றியை சமர்ப்பிக்கின்றோம்!






No comments