ஏறாவூர் ஆதார வைத்தியசாலையில் கொவிட் விடுதி!
ஏறாவூர் வைத்தியசாலையில் முன்னாள் இராஜாங்க அமைச்சர் அலி ஸாஹிர் மௌலானா அவர்களது ஒழுங்கமைப்புடன் அமைக்கப்பட்ட கொவிட் விடுதி மற்றும் அவசர சிகிச்சை பிரிவு என்பவற்றை உத்தியோகபூர்வமாக கையளிக்கும் நிகழ்வு வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் தயாளினி சசிகுமார் தலைமையில் நேற்று (17) இடம்பெற்றது.
இதில் ஏறாவூர் நகர முதல்வர் நழீம் , பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் நா. மயூரன், கிழக்கு மாகாண முன்னாள் சுகாதார அமைச்சரும் ஏறாவூர் நகர சபை உறுப்பினருமான சுபையிர், ஏறாவூர் நகர சபை உறுப்பினர்களான ரியாழ், மற்றும் ஜப்பார், சமூக ஆர்வலர்கள், வைத்தியசாலை வைத்தியர்கள் ஊழியர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
குறித்த விடுதியில் கொவிட் நோயாளர்கள் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை வழங்கப்பட உள்ளதுடன் முதற் கட்டமாக பெண்களை அனுமதிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.







No comments