சமய, சமூக அமைப்புக்கள் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கைச்சாத்து!
(கியாஸ் ஷாபி)
கிண்ணியா பிரதேச செயலகப் பிரிவில் இயங்கி வரும் மூன்று முக்கிய சமய, சமூக அமைப்புகளான பள்ளிவாயல்கள் சமாஜம், அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா சபை, கிண்ணியா மஜ்லிஸ் அஷ் ஷுரா ஆகியன ஒன்றிணைந்து இன்று(15) புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றில் கைச்சாத்திட்டுள்ளன என கிண்ணியா மஜ்லிஸ் அஷ் ஷுரா தலைவர் ஏ. ஆர். எம். பரீட் தெரிவித்தார்.
இந்த விடயம் குறித்து அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கும் போது,
கிண்ணியா பிரதேசத்தில் பொது விவகாரங்களை முன்னெடுப்பதற்காக குறித்த விடயங்களில் ஒரே நோக்கத்திற்காக வெவ்வேறு தளங்களில் செயல்படுவதனால் ஏற்படும் கால மற்றும் வள விரயங்களை தவிர்த்து பிரதேசத்தின் பலத்தையும் வளங்களையும் ஒருங்கிணைத்து, நெறிப்படுத்தப்பட்ட சமய, சமூக விவகாரங்களை பகிர்ந்து, பரந்தளவில் முன்னெடுப்பதற்காக இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டிருக்கிறது என்று தெரிவித்தார்.
அவர் மேலும் கூறும்போது, இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தில், பின்வரும் விடயங்களில் இணக்கம் தெரிவிக்கப்பட்டுள்ளன.
பிரதேசத்தின் சமய, சமூக விவகாரங்களில் இந்த மூன்று நிறுவனங்களும் புரிந்துணர்வுடன் செயற்படுவதற்கும் .ஒவ்வொரு அமைப்புக்களும் தங்களது யாப்புக்கு அமைவாகவும் இவ் ஒப்பந்தத்தின் குறித்தொதுக்கப்பட்ட விவகாரங்களிலும் சுயாதீனமாக செயல்படுவதற்கும் உரித்துடைய வையாகும்.
மேலும், ஓர் அமைப்பின் குறித்தொதுக்கப்பட்ட விடையதானத்திற்கு பொறுப்பான அமைப்பு செயல்படாதவிடத்து, அவ் அமைப்பின் எழுத்துமூல அனுமதியைப் பெற்று, மற்றுமொரு அமைப்பு அவ்விடத்தை முன்னெடுக்க முடியும் என்றும்
குறித்த ஒரு அமைப்பானது தங்களுக்குரிய விடயதானத்தில் செயற்படுவதற்காக மற்றொரு அமைப்பிலுள்ள துறை சார்ந்தவர்களின் ஒத்துழைப்பைப் பெற்றுக்கொள்ள முடியும் என்றும் இணக்கம் தெரிவிக்கப்பட்டுள்ளது
மேலும் ஓர் அமைப்பின் செயற்பாட்டிற்கு மற்றொரு அமைப்பு இணக்கப்பாட்டுடன், நிதி உதவி வழங்க முடியும் என்றும்
பள்ளிவாயல்கள் சமாஜமானது தங்களுடைய விடயங்களை செயல்படுத்துவதுடன், அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா சபையினதும், கிண்ணியா மஜ்லிஸ் ஆஷுராவிதும் செயற்பாடுகளை கிராம மட்டத்தில் அமுல் படுத்துவதற்கு ஒத்துழைப்பு வழங்குவதோடு
ஒவ்வொரு அமைப்பும் தங்களுக்கென குறித்து வைக்கப்பட்ட விடயத்துக்கு இணங்க செயற்படுபதற்கும் இணக்கம் தெரிவிக்கப்பட்டுள்ளது என்றும் தெரிவித்தார்.
சமய, சமூக அமைப்புக்கள் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கைச்சாத்து!
Reviewed by NewsTimeTamil
on
August 18, 2021
Rating: 5
Reviewed by NewsTimeTamil
on
August 18, 2021
Rating: 5






No comments