கட்டாய பிசிஆர் பரிசோதனை!
தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டத்தை மீறியவர்களுக்கு கட்டாய பிசிஆர் பரிசோதனை!
(கியாஸ் ஷாபி)
கிண்ணியா பிரதேச சுகாதார பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டத்தை மீறி வீதிகளில் நடமாடியவர்களுக்கு கட்டாய பிசிஆர் இன்று (23) பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
இவ்வாறு தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டத்தை மீறி நடமாடிய 25 பேருக்கு பிசிஆர் பரிசோதனைக்கான மாதிரிகள் பெறப்பட்டன என்றும் மக்கள் சட்டத்தை மதித்து அவதானமாகவும் பொறுப்புடனும் நடந்து கொள்ள வேண்டுமெனவும் கிண்ணியா சுகாதார வைத்திய அதிகாரி எம் எச் எம் ரிஸ்வி தெரிவித்தார்.
இதேவேளை, கிண்ணியா சுகாதார பிரிவுக்குட்பட்ட பிரிவில் விசேட தேவையுடையவர்கள் தடுப்பூசியை பெற்றுக்கொள்வதற்காக நடமாடும் சேவை ஒன்று ஆரம்பிக்கப்பட்டிருப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.







No comments