Breaking News

திருகோணமலையில் கவனயீர்ப்பு போராட்டம் !






 ( கியாஸ் ஷாபி )

ஆசிரியர்கள் மற்றும் அதிபர்களின் சம்பள முரண்பாட்டை நீக்கக் கோரியும் கொத்தலாவல பல்கலைக்கழகத்தின் சட்டமூலத்தை வாபஸ் பெறக் கோரியும் இன்று (2) திருகோணமலையில் ஆசிரியர்களும் அதிபர்களும் இணைந்து கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை நடாத்தினர்.

திருகோணமலை மாவட்ட ஆசிரியர் மற்றும் அதிபர் சங்கங்களினால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த கவனயீர்ப்பு போராட்டமானது திருகோணமலை கண்டி வீதி மக்கோ சந்தியிலிருந்து ஆரம்பித்து ஆளுநர் அலுவலகம் வரை சென்றது. பின்னர் அங்கு மாபெரும் பொதுக்கூட்டம் ஒன்றும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. கூட்டத்தின் முடிவில் அதிபர் ஆசிரியர்களின் கோரிக்கைகள் அடங்கிய மகஜர் ஒன்றும் கிழக்கு மாகாண ஆளுநர் அலுவலகத்தில் கையளிக்கப்பட்டது. 





No comments