Breaking News

கிண்ணியா சமுர்த்தி பயனாளிகளுக்கு சிப்தொற உதவித் திட்டம்.




கிண்ணியா பிரதேசத்தில் சிப்தொற திட்டத்தின் கீழ், சமூர்த்தி பயனாளிகளுக்கு வாழ்வாதார உதவிகள் வழங்கிவைக்கப்பட்டன.

இதற்கான நிகழ்வு நேற்று கிண்ணியா பிரதேச செயலகத்தில் பிரதேச செயலாளர் எம்.ஏ. அனஸ் தலைமையில் நடைபெற்றது. 

இதன்போது குடியேறியவர்களுக்கான 89 வீடுகளுக்கான நிதியும், 28 மலசல கூடம் அமைப்பதற்கான 2ம் கட்ட கொடுப்பனவும் வழங்கப்பட்டது. மேலும் 607 புதிய பயனாளிகளுக்கு சமூர்த்தி உதவியும், வறுமைக் கோட்டின் கீழ் வாழும் 67 மீனவர்களுக்கு மீன்பிடி உபகரணங்களும் வழங்கிவைக்கப்பட்டதோடு, சமூர்த்தி பயன்பெறும் குடும்பங்களில் நேர்முகத்தேர்வில் தெரிவுசெய்யப்பட்ட 274 உயர்தர மாணவர்களுக்கான புலமைப்பரிசில்களும் வழங்கப்பட்டன.

இது தவிர சமூர்த்தி பயனாளிகளில் தகுதியான இருவருக்கு 10 லட்சம் பெறுமதியான கடன் தொகையும், பெண் தலைமை தாங்கும் குடும்பங்களுக்கான தெரிவு செய்யப்பட்ட 10 குடும்பங்களுக்கு தலா 10 மரமுந்திரிகை மரக்கன்றுகளும் வழங்கப்பட்டன. இந்த நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் கபில நுவான் அத்துக்கொரல, மாவட்ட அரசாங்க அதிபர் சமன் தர்சன பாண்டிகொரல ஆகியோர் அதிதிகளாக கலந்து கொண்டு உதவிகளை வழங்கி வைத்தனர்.

No comments