Breaking News

கிண்ணியாவில் அனைத்து ஆரம்பப் பிரிவு பாடசாலைகளிலும் கற்பித்தல் செயற்பாடுகள் ஆரம்பம்.



கிண்ணியா வலயக் கல்வி அலுவலக பிரிவுக்குட்பட்ட பாடசாலைகளில் ஆரம்ப பிரிவு மாணவர்களின் வருகை திருப்திகரமானதாக இருந்ததாக அதிபர்கள் தெரிவித்தனர்.

சுமார் ஆறு மாத காலத்திற்கு பின்னர் இன்று தேசிய ரீதியில் ஆரம்பப்பிரிவு மாணவர்களுக்காக பாடசாலைகள் ஆரம்பிக்கப்பட்டன .

இந்த நிலையில் கிண்ணியாbவலய கல்வி அலுவலக பிரிவுக்குட்பட்ட 66 பாடசாலைகளில் ஆரம்ப பிரிவுகள் இன்று ஆரம்பிக்கப்பட்டன.

பெரும்பாலும் எல்லாப் பாடசாலைகளிலும் ஆரம்பப் பிரிவு ஆசிரியர்களின் வரவு நூறுவீதம் இருந்ததாகவும் ஆரம்பப் பிரிவு மாணவர்களின் வரவு 65 - 75 வீதத்திற்கு இடைப்பட்ட இருந்ததாகவும் அதிபர்கள் தெரிவித்தனர்.

இதேவேளை மாணவர்கள் உற்சாகத்தோடு வருகை தந்ததையும், பெற்றோர்கள் ஆர்வத்தோடு அவர்களை அழைத்து வந்ததையும் காணக்கூடியதாக இருந்தது. சில பாடசாலைகளில் மாணவர்களுக்கு இனிப்பு பண்டம் வழங்கி, வரவேற்கப்பட்டதையும் அவதானிக்கக்கூடியதாக இருந்தது.


No comments