Breaking News

குழப்படி செய்யும் மாணவனைத்தான் அந்த வகுப்பின் தலைவராக ஆசிரியர் நியமிப்பார்

 


குழப்படி செய்யும் மாணவனைத்தான் அந்த வகுப்பின் தலைவராக ஆசிரியர் நியமிப்பார் அதேபோன்றுதான் ஒரே நாடு ஒரே சட்டம் என்ற செயலணி குழுவின் தலைவராக ஞானசார தேரரை ஜனாதிபதி நியமித்திருக்கிறார் என காணி அமைச்சர் எஸ். எம். சந்திரசேன தெரிவித்தார். 


ஜனாதிபதியின் சுபீட்சத்தின் நோக்கு தேசிய வேலைத்திட்டத்தின் கீழ், வீட்டுக்கு உறுதி என்ற தொனிப்பொருளில் கிண்ணியா பிரதேசத்தில் 89 பேருக்கு காணி உறுதிப்பத்திரம் வழங்கிவைக்கப்பட்டது.

இதற்கான நிகழ்வு நேற்று (28) கிண்ணியா பிரதேச செயலகத்தில் நடைபெற்றது. இதில் காணி அமைச்சர் எஸ். எம். சந்திரசேன கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

காணி அமைச்சர் மேலும் உரையாற்றுகையில்,

ஜனாதிபதி பௌத்த மதத்துக்கு உரியவர் என்றும், அதனால் ஏனைய மதங்களுக்கு அச்சுறுத்தலாகவும் இடையூறாகவும் இருப்பார் என்றும் சிறுபான்மையினர் மத்தியில் இருந்து வந்த தப்பான சிந்தனை இப்போது விலகி வர ஆரம்பித்திருக்கிறது..

வீட்டுக்கு வீடு உறுதி வழங்கும் தேசிய திட்டத்தின் கீழ், திருகோணமலை மாவட்டத்தில் முதலாவதாக கிண்ணியா பிரதேசத்தில் வழங்கப்படுவதையிட்டு மகிழ்ச்சி அடைகின்றேன்.தி

ருகோணமலை மாவட்டத்தில் 3000 பேருக்கு காணி உறுதிப்பத்திரம் வழங்குவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.

இந்த நாட்டிலுள்ள அனைத்து மக்களும் ஒரே நாட்டவர் என்ற அடிப்படையில் ஜனாதிபதி தனது தூரநோக்கு சிந்தனை இப்போது ஆரம்பித்திருக்கிறார்.


அரச காணிகளில் குடியிருக்கும் அனைவருக்கும் காணி உறுதிப்பத்திரம் வழங்கப்பட வேண்டுமென ஜனாதிபதி என்னிடம் பணித்துறை பிடித்து இருக்கின்றார். அதற்காக சகல நடவடிக்கையை நான் எடுத்து வருகின்றேன்.

இந்தத் திட்டத்தின் கீழ் ஒரு லட்சம் காணி உறுதிகள் வழங்கப்பட வேண்டும். இருந்தும் கொனோரா அனர்த்தம் காரணமாக அவற்றை முழுமையாக பூர்த்தி செய்ய முடியாது போனாலும் ஆகக்குறைந்தது அறுபதாயிரம் உறுதிப்பத்திரம் வழங்குவதற்கான நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம் என்றும் தெரிவித்தார்.

No comments