திருகோணமலையில் ஒரு லட்சம் மரக்கன்றுகள் நடும் திட்டம் ஆரம்பம்!
இதன் முதற்கட்டமாக இன்று 1000 மரக்கன்றுகள் நாட்டப்பட்டது.
யான்ஓயா நீர்ப்பாசனத்திட்டத்தின் பகுதிகள் மற்றும் கோமரங்கடவல பிரதேச செயலகப்பிரிவுக்குட்பட்ட மல்போருவ கிராமத்தின் வனாந்தரப்பகுதியை மையப்படுத்தி இம் மரக்கன்றுகள் நாட்டப்பட்டன.
மல்போருவ வித்தியாலயத்தில் வைபவரீதியாக ஆளுனர் மரக்கன்றுகளை நட்டு செயற்திட்டத்தை ஆரம்பித்து வைத்தார்.
பாடசாலை சூழலில் மாணவர்களினால் மரக்கன்றுகள் நாட்டப்பட்டன.





No comments