Breaking News

60 வயதுக்கு மேற்பட்ட 115 பேர் உயிரிழப்பு!

 



இலங்கையில் கொரோனா வைரஸ் தாக்கத்தின் 2ஆவது அலைமூலம் கடந்த ஒக்டோபர் 4 ஆம் திகதி முதல் நேற்றுவரை 168 பேர் உயிரிழந்துள்ளனர். இவ்வாறு உயிரிழந்தவர்களில் 115 பேர் 60 வயதைக்கடந்தவர்களென சுகாதார அமைச்சின் தரவுகள் தெரிவிக்கின்றன.

கொரோனா வைரஸ் தாக்கத்தால் 10 -30 வயதுக்கிடைப்பட்ட மூவரும், 31- 40 வயதுக்கிடைப்பட்ட ஐவரும் , 41-50 வயதுக்கிடைப்பட்ட 18 பேரும், 51 -60 வயதுக்கிடைப்பட்ட 26 பேரும், 61-70 வயதுக்கிடைப்பட்ட 33 பேரும், 71 வயதுக்கு மேற்பட்ட 82 பேரும் இதுவரை உயிரிழந்துள்ளனர்.

இலங்கையில் கொரோனா வைரஸ் 2ஆவது அலைமூலம் நேற்றிரவுவரை 33 ஆயிரத்து 950  பேருக்கு கொரோனா வைரஸ் தொற்றியுள்ளது. இவர்களில் 25 ஆயிரத்து 274 பேர் குணமடைந்துள்ளனர்.




No comments