திருமலையில் கவனயீர்ப்பு போராட்டம்.
கிழக்கு மாகாண கல்வி அமைச்சுக்கு முன்னால் இன்று (18) கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று நடைபெற்றது.
அனைத்து மாணவர்களுக்கும் சமமான கல்வி கிடைக்க வேண்டும் என்ற தொனிப்பொருளில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தை தேசிய மக்கள் சக்தி ஏற்பாடு செய்திருந்தது.
தேசிய மக்கள் சக்தியின் திருமலை மாவட்ட அமைப்பாளர் அருண் கேம சந்திர தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில்,
இந்த கொரோனா அனர்த்த சூழ்நிலையில் ஒன்லைன் மூலமான கல்வியை வழங்க அரசாங்கம் மேற்கொண்ட நடவடிக்கையினால், கிராமபுற மாணவர்கள் பெரிய அளவில் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். இதனால் அவர்களும் ஒன்லைன் வசதியைப் பெற நடவடிக்கை எடுக்க வேண்டும். இதன் மூலமே அனைத்து மாணவர்களும் சமமான கல்வி கிடைக்கும் என்ற கோஷசங்கள் முன்வைக்கப்பட்டன.








No comments