Breaking News

பாடசாலை மாணவர்களுக்கு மாதாந்த புலமைப் பரிசில்.

 


ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ ஜனாதிபதியாக பதவியேற்று ஒரு வருட பூர்த்தியை முன்னிட்டு நேற்று (16) மூதூர் பிரதேச செயலகத்தில் பொதுஜன பெரமுன முஸ்லிம் சம்மேளனத்தின் மூதுார் கிளையினால் 1000/= ரூபா புலமைப் பரிசில் நிதி 15 மாணவர்களுக்கு வழங்கிவைக்கப்பட்டது.

பிரதேச செயலாளர், உதவித் திட்டமிடல் பணிப்பாளர், மற்றும் கணக்காளர், நிருவாக உத்தியோகத்தர் ஆகியோரின் பங்குபற்றுதலுடன் நடைபெற்ற இந்நிகழ்வில் பொதுஜன பெரமுன கட்சியின் மூதூர் செயற்பாட்டாளர் A.H.அஸ்வர், மகளிர் அணி செயற்பாட்டாளர் மஃறுாப் ரயிஷா, மூதூர் வலயக்கல்விப் பணிமனையின் உதவிக்கல்விப்பணிப்பாளர் V.M.லாபீர், சமுர்த்தி உத்தியோகத்தர் S.M.ஜிஹாத் ஆகியோர்கள் கலந்து கொண்டனர்.

No comments