மாகாண சபை தேர்தலை நடத்தியே ஆகவேண்டும்
(கியாஸ் ஷாபி)
கட்டாயமாக மாகாண சபை தேர்தல் நடத்தியே ஆகவேண்டும் இந்தியாவின் அழுத்தம் இதுதான். இல்லையேல் உதவிகள் அனைத்தும் தடைப்படும். இதை புரிந்து கொள்ள முடியாத பிக்குகள் மாகாண சபை முறைமையை எதிர்த்து ஆர்ப்பாட்டங்களை நடாத்தி வருகின்றனர் என்று தேசிய விடுதலை மக்கள் முன்னணியின் தலைவர் முஸம்மில் மொஹிதீன் தெரிவித்தார்.
மாகாண சபைகள் தேர்தல் தொடர்பாக நேற்று அவர், ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்தார்.
அவர், மேலும் கருத்து தெரிவிக்கையில்,
MCC ஒப்பந்தம் தடைப்பட்டதால் அமெரிக்கா பல சதி சூத்திரங்களை தயாரிக்கும் அபாயம் எழுந்துள்ளது. அடுத்து சீனா நாட்டை முழுமையாக அதன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரும் திட்டத்தையும் அமெரிக்கா மேற்கொண்டுள்ளது.
உலக நாட்டு வங்கிகள் இலங்கையின் வங்கிகளின் கடன் பத்திரங்களை நிராகரித்துள்ளது. இதனால் இறக்குமதி அனைத்தும் ஸ்தம்பிதம் அடையும் நிலை ஏற்பட்டுள்ளது.
இப்படியான இறுக்கமான நிலையில் அரசாங்கம் தேர்தலில் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியாமல் தினறிக் கொண்டிருக்கிறது. மறுபுறம் ஜனாஸா எரிப்பு விவகாரத்தால் மீள முடியாத திண்டாட்டத்தில் அரசு சிக்கித் தவித்துக் கொண்டிருக்கிறது.
சர்வதேச நாடுகளுடன் இராஜதந்திரமாக நகர முடியாத நிலையை ஜனாதிபயின் செயற்பாடுகளில் இருந்து அறியக்கூடியதாகவுள்ளது.
இதனால் நாளுக்கு நாள் இலங்கையின் பொருளாதாரம் பின்னடைவை நோக்கி செல்லுகிறது என்றும் தெரிவித்தார்..






No comments