Breaking News

அப்துல்லா மகரூபின் விடுதலைக்காக இம்ரான் மகரூப் பிரார்த்தனை.


(கியாஸ் ஷாபி)

முன்னாள் பிரதி அமைச்சரும் திருகோணமலை மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான அப்துல் மகரூபின்  விடுதலைக்காக அனைவரும் பிரார்த்திப்போம் என திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மகரூப்  தனது உத்தியோகபூர்வ முகநூல் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

அப்துல்லா மகரூப் விடுதலை செய்யப்பட வேண்டும் என்ற உணர்வு,  அவரது ஆதரவாளர்கள் மத்தியில்  மாத்திரமன்றி, திருமலை மாவட்ட மக்கள் மத்தியிலும் இருப்பதை  

அவதானிக்கக் கூடியதாகவுள்ளது. மேலும், சமூக வலைத்தளங்களில், அவரது விடுதலைக்காக பிரார்த்திக்குமாறு கோரி,  பல்வேறு தரப்பினரிடமிருந்தும் அதிகமான பதிவுகள் இடப்பட்டிருப்பதையும் காணக்கூடியதாகவுள்ளது. 

இந்த நிலையிலே, அப்துல்லா மகரூபின் விடுதலை தொடர்பாக இம்ரான் மகரூபின் கருத்தும் வெளியிடப்பட்டிருப்பது, கட்சி வேறுபாடுகளுக்கு அப்பால், உரிமை அரசியலின் தேவையை இது உணர்த்துவதாக அமைந்துள்ளது. 

கடந்த 14 ஆம் திகதி கொழும்பு குற்றப்புலனாய்வு அதிகாரிகளினால் கிண்ணியாவில்  தனது இல்லத்தில் வைத்து கைது செய்யப்பட்ட அப்துல்லாஹ் மகரூப்,  மறுநாள் 15ஆம் தேதி நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டபோது, அவரை 14 நாட்கள் (இன்று 2020.12.30 வரை) விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியிருந்தது

அதற்கிணங்க, இன்று பகல்12.30 மணிக்கு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த பட்டுள்ளார் என அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.

2014 - 2015 காலப் பகுதியில்  சதோச நிறுவனத்திற்கு சொந்தமான வாகனம் ஒன்றை முறைகேடாக பயன்படுத்தியமை தொடர்பில் கைது செய்யப்பட்டதாக அன்று, குற்றப் புலனாய்வுத்துறை அதிகாரிகளால் தெரிவிக்கப்பட்டிருந்துமை குறிப்பிடத்தக்கது. 


No comments