Breaking News

கொட்டகலையில் பிரார்த்தன லிங்கம் பிரதிஷ்டை செய்யப்பட்டது.

 



 (எஸ்.தியாகு)

கொட்டகலை தர்மபுரம் அருள்மிகு ஸ்ரீ சிவகாமி சமேத சுந்தரேஸ்வரர் ஆலய முன்றலில் 'பிரார்த்தன லிங்கம்' பிரதிஷ்டை நிகழ்வும் அபிஷேக பூஜை நிகழ்வுகளும் கடந்த செவ்வாய் (15) காலை இடம்பெற்றது.
முன்னதாக பிரம்ம முகூர்த்தத்தில் பிரதிஷ்டை செய்யப்பட்ட சிவலிங்க திருவுருவத்துக்கான விசேட பூஜைகள் மற்றும் பக்தர்கள் வழிபாடு இன்று காலை இடம்பெற்றன.
இலங்கை தீவெங்கும் 108 சிவலிங்கங்களை பிரதிஷ்டை செய்யும் பணியில் ஈடுபட்டுள்ள உலக சைவத்திருச்சபையின் அனுசரணையில் மேற்படி சிவலிங்கமும் நந்தியும் பலிபீடமும் ஆலயத்துக்கு வழங்கப்பட்டுள்ளமை முக்கிய விடயம்.
கனடா பெரிய சிவன் ஆலயத்தை தலைமையகமாகக் கொண்டியங்கும் உலக சைவத்திருச்சபையின் ஸ்தாபகர் அடியார் விபுலாநந்தாவின் வழிகாட்டுதலின் பேரில் சுந்தரேஸ்வரர் ஆலய பரிபாலன சபையினர் இந்நிகழ்வை ஏற்பாடு செய்திருந்தனர்.
மிகவும் எளிய முறையில் சிவனை பிரார்த்தனை செய்து அவருக்கு பக்தர்கள் அனைவரும் நீராபிஷேகம் செய்து வழிபாடு செய்வதற்காகவே இந்த பிரார்த்தன லிங்கம் பிரதிஷ்டை செய்யப்படுவதாக ஆலய பரிபால சபைத்தலைவர் ராஜகோபால் சத்தியமூர்த்தி தெரிவித்தார். இன்று மாலை விசேட பூஜை வழிபாடுகள் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
சிவலிங்க பிரதிஸ்டையும் விசேட பூஜைகளும் ஆலய பிரதம குருக்கள் சந்திரகாந்த் குருக்கள் தலைமையில் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

No comments