இலங்கையில் 11 மில்லியன் மக்களுக்கு கொவிட் தடுப்பூசி இலவசம்
50 வீதமான இலங்கையர்களுக்கு கொரோனா தடுப்பூசி இலவசமாக வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருவதாக ஊடகத்துறை அமைச்சரும், அமைச்சரவை பேச்சாளருமான கெஹெலிய ரம்புக்வெல தெரிவிக்கின்றார்.
அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பில் இன்று கலந்துக்கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
இதன்படி, இலங்கையிலுள்ள 11 மில்லியன் மக்களுக்கு கொவிட் தடுப்பூசியை இலவசமாக வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.
பெரும்பாலும் மார்ச் மாதமளவில் கொவிட் தடுப்பூசியை நாட்டிற்கு கொண்டு வர முடியும் என அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
4 விதமான தடுப்பூசிகள் குறித்து தற்போது கலந்துரையாடல்கள் நடத்தப்பட்டு வருவதாகவும் அமைச்சரவை பேச்சாளர் மேலும் கூறினார்






No comments