Breaking News

இன்றைய பரிசோதனையில் எவருக்கும் தொற்று உறுதிப்படுத்தப்படவில்லை.

 


(கியாஸ் ஷாபி)

கிண்ணியா சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக பிரிவில் இன்று (25) 62 பேருக்கு அன்டிஜென் பரிசோதனையும் 42 பேருக்கு PCR பரிசோதனையும் செய்திருப்பதாக கிண்ணியா பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி எம்.எச்.எம்.றிஸ்வி தெரிவித்தார்.

இது தொடர்பாக அவர் மேலும் கருத்து தெரிவிக்கும் போது, இந்தப் பரிசோதனை, கடந்த 16 ஆம் திகதி தொற்றாளர்களாக இனங்காணப்பட்ட மாஞ்சோலைச்சேனை கிராம சேவகர் பிரிவில் உள்ள அண்ணல் வீதியில் உள்ளவர்களுக்கு மேற்கொள்ளப்பட்டது. எனினும் அன்டிஜன் பரிசோதனையில் எவருக்கும் தொற்று உறுதிப்படுத்தப்படவில்லை.

மேலும் 42 நபர்களின் இரத்த மாதிரிகளை, PCR பரிசோதனைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது என்றும் தெரிவித்தார்.

இதேவேளை, கொரோனா வைரஸ் தொற்றின் பரவல் வீழ்ச்சியடைந்து வருவதால், முடக்கப்பட்ட மாஞ்சோலை கிராமத்தை திறப்பதற்கு கொழும்பு கொரோனா கண்காணிப்பு மத்திய நிலையத்தினால் இன்று அனுமதி கிடைக்கப்பட்டதாகவும் அவர் நியூஸ் டைமுக்கு தெரிவித்தார். 



 








  







 



No comments