கிழக்கு மாகாணக் கல்வி அமைச்சின் செயலாளர் இடமாற்றம்.
(கியாஸ் ஷாபி)
கிழக்கு மாகாணக் கல்வி அமைச்சின் செயலாளராக கடமையாற்றிய எம்.ஏ.ஜி.பி.முத்துபண்டா இன்று (2021.01. 05) முதல் வீதி அபிவிருத்தி அமைச்சின் செயலாளராக கடமையாற்றுவதற்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
நிர்வாக சேவை விசேட தர உத்தியோகத்தாரன இவர், கிழக்கு மாகாண பொதுச் சேவை ஆணைக்குழுவின் செயலாளாராக சிறிது காலம் கடமையாற்றினர். இதன் பின்னர், 2018 ஆம் ஆண்டு ஜுன் மாதம் கிழக்கு மாகாணக் கல்வி அமைச்சின் செயலாளராக நியமிக்கப்பட்டார்.
இவருக்கான பிரியாவிடை வைபவம் நேற்று (4) கிழக்கு மாகாண கல்வி அமைச்சின் மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது. இதனை கிழக்கு மாகாண கல்வி அமைச்சின் நலன்புரிச் சங்கம் ஏற்பாடு செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.






No comments