புதிய வகை கொரோனா இலங்கையில் அடையாளம் காணப்பட்டுள்ளது!
மிக வேகமாக பரவக்கூடிய மற்றொரு வகை கொரோனா இலங்கையில் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .
ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழக , நீர்ப்பீடனம் மற்றும் மூலக்கூற்று உயிரியல் பிரிவின் பணிப்பாளர் , வைத்திய கலாநிதி சந்திம ஜீவந்தர இதனை உறுதிப்படுத்தியுள்ளார்.
தற்போது அடையாளம் காணப்பட்டுள்ள 0oCITITOOTIT 606 (SARS - CoV - 2 B1258 ) , ஏற்கனவே இலங்கையில் அடையாளம் காணப்பட்ட ( B1411 ) கொரோனா வகையிலும் பார்க்க வேறுபட்டது எனவும் , இதன் பரவல் வேகம் மிக அதிகமானது எனவும் அவர் தெரிவித்துள்ளார் . கடந்த இரு வாரங்களுக்குள் அடையாளம் காணப்பட்ட நோயாளர்களிடையே இப்புதிய வகை வைரஸ் அடையாளம் காணப்பட்டதாக அவர் மேலும் தெரிவித்தார் . சுகாதார அமைச்சு மற்றும் தொற்றுநோயியல் பிரிவு ஆகியவற்றின் வேண்டுகோளுக்கிணங்க , கொவிட் -19 மரபணு மாற்றங்கள் தொடர்பில் ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வரும் ஆய்வின்அடிப்படையில் இது கண்டறியப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார் .
குறித்த வைரஸ் வகை பிரித்தானியா டென்மார்க் , ஜேர்மனி , சுவீடன் , ஐஸ்லாந்து உள்ளிட்ட நாடுகளில் இவ்வகையான வைரஸ் அடையாளம் காணப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார் . ஆயினும் பொதுமக்கள் இது குறித்த அச்சம் கொள்ளத் தேவையில்லை எனத் தெரிவித்த அவர் , தடுப்பூசி நோயெதிர்ப்பில் பாதிப்பை ஏற்படுத்தாது என தகவல்கள் தெரிவிப்பதாக சுட்டிக்காட்டினார் .






No comments