Breaking News

குச்சவெளி பிரதேச விளையாட்டுக்கழகங்களை பதிவு செய்ய அறிவுறுத்தல்.

  

(பி.எம்.நாஸீம்)

குச்சவெளி பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட விளையாட்டு கழகங்களை புதிதாக பதிவு செய்வதற்கும் மற்றும் மீள் பதிவு செய்வதற்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என குச்சவெளி பிரதேச செயலாளர் தெரிவித்துள்ளார்.  

2021/2022 ஆண்டுக்கான  கழகங்களை புதிதாக பதிவு செய்தல் மற்றும் மீள் பதிவு செய்தல் நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு மாகாண விளையாட்டுத் திணைக்களத்தின் அறிவுறுத்தல்களுக்கு அமைய, கழகங்களை பதிவு செய்யும் இறுதித் திகதியாக 28.02 2021 ஆம் திகதி குறிப்பிடப்பட்டுள்ளது . 

எனவே, கழகங்களை பதிவு செய்யும் நடவடிக்கையை விளையாட்டு உத்தியோகத்தர் மற்றும் கிராம உத்தியோகத்தர்கள் ஆகியோரை தொடர்பு கொண்டு கூட்டத்திற்கான ஏற்பாட்டுள் செய்யப்படுவதுடன், தங்களது கிராம சேவை பிரிவு பொது சுகாதார பரிசோதகருடன் தொடர்பு கொண்டு Covid -19 சுகாதார நடைமுறைகளை பின்பற்றியும் அந்த கூட்டம் ஒழுங்குபடுத்தப்படுவதோடு, கழகத்தினை பதிவு செய்வதற்காக பின்வரும் ஆவணங்களையும் சமர்பிக்க வேண்டும்.

1.பொது கூட்டத்திற்கு விளையாட்டு உத்தியோத்தர் மற்றும் கிராம உத்தியோகத்ருக்கு அழைப்பு விடுத்த கடிதத்தின் பிரதி.

2.பொது கூட்டத்தில் கலந்து கொண்ட அங்கத்தவர்களின் வரவு உறுதிப்படுத்திய ஆவணத்தின் பிரதி.

3.கழகத்தின் யாப்பு ( மாகாண விளையாட்டுத் திணைக்களத்தினால் வழங்கப்பட்டுள்ள யாப்பினை ஒத்ததாக காணப்படல் வேண்டும் ) 

4.வரவு செலவு அறிக்கை பிரதி.

5. பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்படிவம் (கிராம உத்தியோகத்தரால் உறுதிப்படுத்தப்படல் வேண்டும் ) 

இவை அனைத்தும் பூர்த்தி செய்து 11.02. 2021 ஆம் திகதிக்கு முன்னர் விளையாட்டு உத்தியோகத்தரிடம் ஒப்படைக்கப்படல் வேண்டும். இதற்கு பின்னர் கிடைக்கப்பெறும் விண்ணப்பப்படிவங்கள் எக்காரணம் கொண்டும் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது என்றும் தெரிவித்துள்ளார். 




No comments