Breaking News

அரசாங்க அதிபர் காத்தான்குடி விஜயம்.


( எம்.எஸ்.எம்.நூர்தீன்) 

மட்டக்களப்பு மாவட்டத்தில் நிலவியுள்ள சீரற்ற கால நிலையினால் காத்தான்குடி பிரதேச செயலாளர் பிரிவில் ஏற்பட்டுள்ள வெள்ள அனர்த்த நிலைமையினை மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் கே.கரணாகரன், மற்றும் மட்டக்களப்பு கல்லடி இராணுவ முகாம் கட்டளை தளபதி  பிரிகேடியர் கேரணல் கமகே ஆகியோர் இன்று நேரில் சென்று பார்வையிட்டனர்.

காத்தான்குடி பிரதேச செயலாளர் யு.உதய சிறீதர் இவர்களை அழைத்துச் சென்று வெள்ளம் ஏற்பட்டுள்ள பகுதிகளை காண்பித்தார்.

புதிய காத்தான்குடி டீன் வீதி, அப்றார் நகர், புதிய காத்தான்குடி றிஸ்வி நகர் மற்றும் தோணாக்கால்வாய் பகுதி போன்ற பகுதிகளில் வெள்ள அனர்த்த நிலைமைகளை பார்வையிட்டனர்.

காத்தான்குடியில் வெள்ள அனர்த்தத்தினால் 11767 குடும்பங்களைச் சேர்ந்த 39782 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக காத்தான்குடி பிரதேச செயலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

No comments