Breaking News

சவூதி அரேபியா, கட்டாருக்கான எல்லையைத் திறந்தது.

 

சவூதி அரேபியா தனது வான்வெளி, நிலம் மற்றும் கடல் எல்லையை இன்று முதல் (5) மீண்டும் கட்டாருக்குத் திறந்துவிடுவதற்கு தீர்மானித்துள்ளதாக குவைத்தின் வெளியுறவு அமைச்சர் தெரிவித்துள்ளார்.

குவைத்தின் ஆட்சியாளர் அமீர் ஷேக் நவாப்பின் முன்மொழிவின் அடிப்படையில், சவூதி அரேபியா மற்றும் கட்டார்  மாநிலங்களுக்கு இடையில் வான்வெளி, நில மற்றும் கடல் எல்லைகளை திறக்க ஒப்புக் கொள்ளப்பட்டது, 

கடந்த 2017 ஜுன் மாதத்தில், சவுதி அரேபியா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், பஹ்ரைன் மற்றும் எகிப்து  ஆகிய நாடுகள் கட்டார் பயங்கரவாதத்தை ஆதரிப்பதாகவும் ஈரானுடன் மிக நெருக்கமாக இருப்பதாகவும் கூறி, இந்த தடையை விதித்தனர்.

கட்டார் பலமுறை இந்த குற்றச்சாட்டுகளை மறுத்து, உறவுகளை துண்டிக்க நியாயமான காரணங்கள் இல்ல என்று கூறி வந்த நிலையிலே இந்த தடை நீக்கப்பட்டிருக்கிறது. 

கட்டார் மற்றும் நான்கு அரபு நாடுகளுக்கு இடையே குவைத் மத்தியஸ்தம் செய்து வருகிறமை குறிப்பிடத்தக்கது. 


No comments