Breaking News

மைத்திரி மீது மொட்டுக் கட்சியினர் சீற்றம் .


உள்ளக அரசியல் முரண்பாடுகள்தொ டர்பான தகவல்களை முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வெளியாட்டு ஊடகங்களிடம் வெளியிட்டமை தவறாகும் – என்று ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன தெரிவித்துள்ளது.

பொதுஜன பெரமுனவின் ஊடகவியலாளர் மாநாடு நேற்று முற்பகல் அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. இதன்போது கருத்து வெளியிடுகையிலேயே அமைச்சர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸ் மேற்கண்டவாறு கூறினார்.இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

” ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன தலைமையில் கூட்டணியாக முன்னோக்கி பயணிப்பதே எமது எதிர்ப்பார்ப்பாக இருக்கின்றது. கூட்டணியில் அங்கம் வகிக்கும் கட்சிகளின் தனித்துவத்தை நாம் மதிப்பதுடன், அவற்றுக்கு உரிய இடம் வழங்கும் வகையிலேயே வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றன.

கூட்டணி என்றால் முரண்பாடுகள் ஏற்படக்கூடும். அவ்வாறான சந்தர்ப்பங்களில் உள்ளக பேச்சுகளில் ஈடுபட்டு பிரச்சினைகளுக்கு தீர்வுகளை காண்பதே ஏற்புடைய நடவடிக்கையாக அமையும்.

No comments