கிண்ணியா பிரதேச நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபைக்கு 1,951,246 ரூபா வருமானம்
(கியாஸ் ஷாபி)
ஜனாதிபதியினால் முன்வைக்கப்பட்ட சுபீட்சத்தின் நோக்கு வேலைத் திட்டத்தின் கீழ், அனைவருக்கும் குடிநீர் வழங்கும் நோக்கோடு கிண்ணியா பிரதேச நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபையினால் ஏற்பாடு செய்யப்பட்ட நடமாடும் சேவை ஒன்று நேற்று (24) இடம்பெற்றது.
கிண்ணியா பிரதேச நீர் வழங்கல் வடிகாலமைப்பு அலுவலக பொறுப்பதிகாரி ஏ.என்.றிபாஸ் இது குறித்து கருத்து தெரிவிக்கும் போது,
இந்த நடமாடும் சேவையில், புதிய நீர் இணைப்பை பெற்றுக் கொடுத்தல், துண்டிக்கப்பட்ட நீர் இணைப்பை மீளப் பெற்றுக் கொடுத்தல், நீர் இணைப்புக்காக தவணை அடிப்படையில் பணம் செலுத்த வசதி செய்து கொடுத்தல் போன்ற மக்கள் சேவைகள் இடம்பெற்றன.
இந்த வகையில், குடிநீர் இணைப்புக்காக 556 விண்ணப்பங்கள் இன்றைய தினத்தில் விநியோகிக்கப்பட்டிருக்கின்றன, இதில் 340 படிவங்கள் பயனாளர்களால் பூரணப்படுத்தப்பட்டு, பெறப்பட்டிருக்கின்றன.
இதில் 326 பேருக்கு மதிப்பீட்டு படிவம் கொடுக்கப்பட்டு, 132 பயனாளர்கள் நீர் இணைப்புக்காக முழுமையாக கட்டணத்தைச் செலுத்தியுள்ளதோடு, பகுதியளவு கட்டணத்தை 14 பயனாளர்களும் செலுத்தியுள்ளனர்.
இந்த வகையில் இன்றைய ஒரு நாள் நடமாடும் சேவை மூலம் 1,951,246 ரூபா கிண்ணியா பிரதேச நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபைக்கு வருமானமாக கிடைத்திருப்பதோடு, கிண்ணியாவில் ஒரே நாளில் அதிக மக்கள் பயன் பெற்றிருப்பது இதுவே முதலாவது சந்தர்ப்பம் என்றும் தெரிவித்த அவர், இந்த நடமாடும் சேவை வெற்றிகரமாக நடைபெறுவதற்கு சமூர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், கிராம உத்தியோகத்தர்கள் மற்றும் நீர் வழங்கல் வடிகாலமைப்பு உத்தியோகத்தர்கள் அனைவருக்கும் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்றும் தெரிவித்தார்.











No comments