Breaking News

திருகோணமலை கல்லூரி மாணவிகள் சர்வதேச பேச்சுப் போட்டியில் சாதனை.


கடந்த ஆண்டு Covid- 19 நோய்த் தொற்றுக் காரணமாக நாட்டில் கல்வி நடவடிக்கைகள் முடக்கப்பட்டிருந்த நிலையில் இந்தியா - பெங்களூர் வித்யா நிகேதன் சர்வதேச பாடசாலையினால் இணைய மூலமாக நடாத்தப்பட்ட சர்வதேச பேச்சுப் போட்டியில் திருகோணமலை மெதடிஸ்த பெண்கள் கல்லூரி மாணவிகள் பங்கு பற்றி வெற்றியீட்டியுள்ளனர்.

08 மாணவிகள் இப் போட்டியில் பங்கு பற்றி வெற்றியீட்டியுள்ளனர், இவர்களிற்கான சான்றிதழ்களும் குறிப்பிட்ட நிர்வாகத்தினால் பாடசாலைக்கு  அனுப்பி வைக்கப்பட்ட நிலையில் வெற்றி சான்றிதழ் களுடன் மாணவிகள் கல்லூரி அதிபர் திருமதி. எஸ். ஜோண் தேவதாஸ், மாணவர்களுக்கான வழிகாட்டல்களை வழங்கிய ஆசிரியர்களான எஸ். ஸ்ரீதர், திருமதி. பிரவினா தட்சாயனன் ஆகியோருடன் நிற்பதை படத்தில் காணலாம். (News Time Tamil) 


No comments