Breaking News

நொச்சிமோட்டை குளத்தின் புனரமைப்பு அங்குரார்ப்பண நிகழ்வு!


முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட செந்தமிழ் இளைஞர் கழகத்தினால் வள்ளிபுனம் நொச்சிமோட்டை குளத்தின் புனரமைப்பு பணிகள் நேற்று(12) மு.ப 10.00மணிக்கு ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.

குறித்த குளத்தின் புனர்நிர்மாணத்திற்கு Au Lanka நிறுவனத்தினரின் அனுசரணையுடன் புனரமைப்பு வேலைத்திட்ட ஆரம்ப நிகழ்வவு சிறப்பாக நடைபெற்றது.

இவ் நிகழ்வில் பிரதம விருந்தினராக புதுக்குடியிருப்பு பிரதேசசெயலாளர் சி.ஜெயகாந்தன் அவர்கள் கலந்து சிறப்பித்து வேலைத் திட்டத்தை வைபவ ரீதியாக ஆரம்பித்து வைத்தார்             (News Time Tamil)

No comments