Breaking News

குறிஞ்சாக்கேணியில் மேலும் ஒருவருக்கு கொரோனா!

 


( கியாஸ் ஷாபி)

குறிஞ்சாக்கேணி பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக பிரிவுக்குட்பட்ட கச்சக்கொடிதீவு அரைஏக்கர் வீதியில் உள்ள குடும்பஸ்தர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக குறிஞ்சாக்கேணி சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் A.M.M.அஜித் இன்று (22) தெரிவித்தார்.

இது தொடர்பாக அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில், குறித்த நபர் கொழும்பில் அரச ஊழியராக பணியாற்றுபவர் என்றும், விடுமுறைக்கு வீடு திருப்பியவரை அன்டிஜென் பரிசோதனைக்கு உட்படுத்திய போது, தொற்று இனங்காணப்படவில்லை. இதன் காரணமாக இவரது இரத்த மாதிரி  PCR மருத்துவ பரிசோதனைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இன்று (22) கிடைக்கப்பெற்ற  இவரது மருத்துவ அறிக்கையின் படி இவருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டிருக்கிறது. 

இதனைத் தொடர்ந்து இவரது முதன் நிலை தொடர்பாளர்கள் ஏழ பேரை அன்டிஜென் பரிசோதனைக்கு உட்படுத்திய போதும், ஒருவருக்கும் தொற்று உறுதிப்படுத்தப்படவில்லை என்று தெரிவித்தார்.  

அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில், இலங்கையில் பெஹலியகொட மீன் சந்தையில் இருந்து ஆரம்பித்த, 2 வது கொரோனா அலைக்குப் பின்னர் இந்த பிரதேசத்தில்   கொரோனா தொற்றாளர்களர்களின் எண்ணிக்கை 17 ஆக உயர்வடைந்துள்ளது என்றும் தெரிவித்தார்.


No comments