இளைஞர்களுக்கு பயிற்சி பட்டறை
திருகோணமலை மாவட்ட இளைஞர் கழக சம்மேளன அங்கத்தவர்களுக்கான வதிவிட பயிற்சி பட்டறை ஒன்று இன்று (9) கிண்ணியா விஷன் மண்டபத்தில் ஆரம்பபமானது.
இப் பயிற்சிப் பட்டறையானது கிண்ணியா பிரதேச இளைஞர் கழக சம்மேளனத்தின் ஏற்பாட்டில் நடைபெற்றது.
இந்த செயலமர்வு திருகோணமலை மாவட்ட இளைஞர் சேவைகள் மன்ற உதவிப் பணிப்பாளர் மஹிந்த யாப்பா, இளைஞர் சேவை உத்தியோகத்தர் A.W.M.ஜிப்ரி, இளைஞர் பாராளுமன்ற அமைச்சர் ற.முகம்மது சபான், கிண்ணியா பிரதேச இளைஞர் கழக சம்மேளனத்தின் தலைவர் ஏ.எம்.சாதிர் ஆகியோரின் வழிகாட்டலின் கீழ், ஒழங்குபடுத்தப்பட்டிருந்தது.
இந்நிகழ்வில் கிண்ணியா பிரதேச செயலாளர் எம்.எஸ்.எம்.கனி, European Campus பணிப்பாளர் ஏ.எச்.எம்.றியாத் தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் திருகோணமலை மாவட்ட இளைஞர் சேவைகள் மன்ற உதவிப் பணிப்பாளர் மஹிந்த யாப்பா, எஸ்.ரவிக்குமார், திருகோணமலை மாவட்ட இளைஞர் பாராளுமன்ற அமைச்சர் ற.முகம்மது சபான், இளைஞர் சேவைகள் உத்தியோகத்தர்கள், முன்னாள் தேசிய சம்மேளன பிரதிநிதி எம்.நெளபான், மற்றும் மாவட்ட இளைஞர் கழக சம்மேளனத்திற்கு உட்பட்ட இளைஞர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.







No comments