Breaking News

எதிர்கட்சியை ஒடுக்குவதற்கு அரசாங்கம் முயல்கின்றது


அரசியல் பழிவாங்கல் குறித்த ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கை மூலம் எதிர்கட்சியை ஒடுக்குவதற்கு அரசாங்கம் முயல்கின்றது என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.

அரசாங்கத்தின் இந்த முயற்சிகாரணமாக இலங்கை சர்வதேச சமூகத்தின் முன்னாள் பல பிரச்சினைகளை எதிர்கொள்ளவேண்டியிருக்கும் என அவர் தெரிவித்துள்ளார்.

அரசாங்கத்தின் அவ்வாறான முயற்சிகளிற்கு எதிர்கட்சி அடிபணியாhது என தெரிவித்துள்ள சம்பிக்க ரணவக்க ஜனநாயகவிரோத நடவடிக்கைகளிற்கு எதிராக பதில் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.

2021ற்க்கான திருப்பிசெலுத்தவேண்டிய கடன் ஏழு பில்லியன் அமெரிக்க டொலராக காணப்படுவதால் சர்வதேச சமூகத்தின் மத்தியில் இலங்கை தனதுகௌரவத்தை காப்பாற்றிக்கொள்ளவேண்டியது அவசியம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கை குறித்த சர்வதேச பார்வை எவ்வாறானதாக காணப்படுகின்றது என்பதை அடிப்படையாக வைத்து கடன்கள் குறித்த முகவர் அமைப்புகள் இலங்கை மதிப்பிடும் என தெரிவித்துள்ள சம்பிக்க ரணவக்க இதன் காரணமாக இலங்கையின் கௌரவத்தை சிதைக்கவேண்டாம் எனவும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இலங்கையை சர்வதேச சமூகம் புறக்கணித்தால் அதற்கு ஜனாதிபதியே பொறுப்பேற்கவேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

- தினக்குரல் -

No comments