Breaking News

கிண்ணியாவில் அக்செரியன் கால்பந்தாட்ட சுற்றுப் போட்டி

    

 


சர்வதேச ரீதியாக சாதனை படைத்த வீரர்கள் பங்கு பற்றும் போட்டி.

எட்டு அணிகள் மோதுகின்றன.

எதிர்வரும் 19, 20, 21, 22 ஆகிய திகதிகளில் கிண்ணியா எழிலரங்கு மைதானத்தில் நடைபெற உள்ளது.

சம்பியன் அணிக்கு 50,000 ரூபாவும் கேடயமும் காத்திருக்கின்றன.

இறுதி போட்டி மின்னொளியில்!

(கியாஸ் ஷாபி) 

கிண்ணியா அல் அக்ஸா கல்லூரியில் கல்வி கற்று கடந்த காலங்களில் விளையாட்டு துறையில் பல்வேறு சாதனைகளை படைத்து கல்லூரிக்கு பெருமை தேடிக் கொடுத்த வீரர்களை உள்ளடக்கிய அணிகளுக்கிடையிலான அக்செரியன் சூப்பர் லீக் என்ற பெயரில் முதலாவது உதைபந்தாட்ட சுற்றுப்போட்டி ஒன்று கிண்ணியாவில் கோலாகலமாக நடைபெறவுள்ளது.


இந்த சுற்றுப் போட்டி தொடர்பான அறிமுக நிகழ்வும் ஊடகவியலாளர் மாநாடும் நேற்று (6) கிண்ணியா பொது நூலக மண்டபத்தில் நடைபெற்றது.


இந்த நிகழ்வில் அக்ஸாரியன் சூப்பர் லீக் பற்றிய அறிமுகம், அனுசரணையாளர்கள் பற்றிய அறிமுகம், அணித்தலைவர்கள் அறிமுகம், வெற்றிக் கிண்ணம் மற்றும் பரிசில்கள் தொடர்பான விளக்கம் மற்றும் சூப்பர் லீக்கின் பாடல் அறிமுகம் போன்ற விடயங்கள் தொடர்பாக ஊடகவியலாளருக்கு தெளிவுபடுத்தப்பட்டது.


இதனை அக்செரியன் சுப்பர் லீக்கின் ஸ்தாபகரும் கிழக்கு மாகாண பாடசாலைகள் உதைபந்தாட்ட சம்மேளனத்தின் முன்னாள் இணைப்பாளருமான ஏ.எல்.முகமட் நபில் முன்வைத்தார்.  


அவர், தனது விளக்க உரைையில், 2007-ம் ஆண்டுக்குப் பின்னர் அல் அக்ஸா கல்லூரியில் கல்வி கற்று, விளையாட்டுத் துறையில் சாதனை படைத்த பழைய மாணவர்களை உள்ளடக்கி பங்குபற்றும் வகையில் இந்த சுப்பர் லீக் போட்டி உருவாக்கப்பட்டுள்ளது. இதன்படி, எட்டு கால்பந்தாட்ட அணிகள் இந்த தொடரில் மோதவுள்ளதாக தெரிவித்தார்.


இது தொடர்பாக அவர், மேலும் கருத்து தெரிவிக்கையில், 

இந்தப் போட்டித் தொடர் எதிர்வரும் (பெப்ரவரி) 19, 20, 21, 22 ஆகிய திகதிகளில் கிண்ணியா எழிலரங்கு மைதானத்தில் நடைபெற உள்ளது. 

19 (வெள்ளி), 20 (சனி) ஆகிய இரண்டு தினங்களும் தொடரின் முதல் சுற்றுப் போட்டியும் 21 ஆம் திகதி (ஞாயிறு) அரை இறுதிப் போட்டிகளும் 22 ஆம் திகதி (திங்கள்)  இறுதிப் போட்டி மின்னொளியிலும் நடைபெற உள்ளன.

இந்த தொடரில் முதலாம் இரண்டாம் மூன்றாம் இடங்களைப் பெறும் அணிகளுக்கு முறையே தலா 50,000 40,000, 30,000 ஆயிரம் ரூபா பணப்பரிசும் கிண்ணமும் வழங்கப்படவுள்ளன.

நான்காம் இடத்தைப் பெறும் அணிக்கு 20 ஆயிரம் ரூபா பணப்பரிசும் போட்டியில் பங்கு கொண்ட ஏனைய அணிகளுக்கு தலா பத்தாயிரம் ரூபா பணப்பரிசும் வழங்கப்படவுள்ளது.

தொடரின் சிறப்பாட்டக்காரருக்கு மௌண்டன் பைசிகள் ஒன்றும் கேடயமும் வழங்கப்படவுள்ளதோடு, தொடரின் சிறந்த கோல் காப்பாளராக தெரிவு செய்யப்படுபவருக்கு 5,000 பணப் பரிசும் கேடயமும் வழங்கப்படவுள்ளது. 

இந்தப் போட்டித் தொடருக்கு முழு அனுசரணையாளராக இருக்கின்ற பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மகரூக்கு நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன் என்றும் கூறினார்.


இதில் பங்குகொள்ளும் அணிகள் மற்றும் தலைவர்களின் விபரங்கள்.

வொரீஸ் ( worries) - என்.எம்.சிபான்

ஜூபிடர்ஸ் (Jupiters) - எம்.எம். றோசான்

சுப்பர் கிங் (Super Kings) - ரீ.எம். றோஹான்

சுப்பர் போய்ஸ் (Super Boys) - எஸ்.எஸ்.இம்பாஸ்

சுப்பர் பைட்டர் (Super fighter) - என்.எம்.றிபாஸ்

புளு ஈக்கிள் (Blue Eagle) - ரீ.எம்.ரோசான்

ப்ளெக் பெண்தர்ஸ் (Black Panthers) - ஐ.எம்.றிம்சான்

றேசின் ஸ்டார்ஸ் (Racing Stars) - எம்.ஆர்.ஆர்.எம்.ஹிசாம்.


No comments