விமல், உதய நீக்கம்? ரிஷாத், ஹக்கீமுக்கு அரசாங்கம் ஆதரவு?
விமல், உதய நீக்கம்? ரிஷாத், ஹக்கீமுக்கு அரசாங்கம் ஆதரவு?
விமல் வீரவன்ச மற்றும் உதய கம்மன்பில ஆகிய இரு அமைச்சர்களும் அரசாங்கத்திலிருந்து இராஜினாமா செய்ய வேண்டியிருக்கும் என்று வார இறுதி சிங்கள பத்திரிகை ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
அதே நேரத்தில் ரிஷாத் பதியுதீன் மற்றும் ரவூப் ஹக்கீம் ஆகியோரின் கட்சிளுக்கு அரசாங்கத்தின் ஆதரவும் கிடைக்கும் என்றும் அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதேவேளை மஹிந்த ராஜபக்ஷவைச் சந்தித்த ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஆதரவாளர்களும் விமல் வீரவன்சவை அரசாங்கத்திலிருந்து நீக்கக் கோரியுள்ளதாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் உதய கம்மன்பிலவை இணை அமைச்சரவை செய்தித் தொடர்பாளர் பதவியில் இருந்து நீக்குமாறும் அவர்கள் கோரியுள்ளதாக அந்த செய்தியில் தெரிவித்துள்ளது






No comments