Breaking News

கிண்ணியா மகாமாறு குளம் புனரமைப்பு

 


"நீர்ப்பாசன செழிப்பு" வேலைத்திட்டத்தின் கீழ் கிண்ணியா பிரதேச செயலகத்துக்குட்பட்ட மகாமாறு குளம் 66 இலட்சம் ரூபா செலவில் புனர்நிர்மாண செய்வதற்கான  ஆரம்பம் வேலைகள் நேற்று  திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் ஒருங்கிணைப்பு குழுவின் இணைத் தலைவருமாகிய கபில நுவன் அத்துக்கோரல தலைமையில் நடைபெற்றது.


இதில் மாவட்ட செயலாளர் சமன் தர்ஷன பாண்டிகோராள கிண்ணியா பிரதேச செயலாளர் முகம்மது கனி, SLPPயின் மூதூர் தொகுதி அமைப்பாளர் நிமல் காமினி, SLP P மூதூர் தொகுதி இணைப்பாளர் இப்றாஹிம் சதாத் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்ட னர்.




 




No comments