Breaking News

மூதூரில் சௌபாக்கிய உற்பத்தி கிராம நிகழ்ச்சித் திட்டம்

 

ஜனாதிபதியின் சுபீட்சத்தின் தொலைநோக்கு சிந்தனையை அடிப்படையாகக் கொண்டு நாடு தழுவிய ரீதியில் இடம்பெற்று வரும் சௌபாக்கிய உற்பத்தி கிராம நிகழ்ச்சித் திட்டத்தின் ஒரு அங்கமாக மூதூர் ஷாபிநகர் கிராம உத்தியோகத்தர் பிரிவில் சௌபாக்கிய உற்பத்தித் திட்டத்திற்கான அங்குரார்ப்பண நிகழ்வு நேற்று (17) நடைபெற்றது.

பிரதேச செயலாளர் எம்.பி.எம். முபாறக் அவர்களின் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பிரதம அதிதியாக திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்  நுவன் கபில அத்துகோரலவும் விசேட விருந்தினராக மாவட்ட அரசாங்க அதிபர்  சமன் தர்சன பாண்டிகோரள அவர்களும் கலந்து சிறப்பித்தனர்.


இவர்களுடன்  பாராளுமன்ற உறுப்பினர் அவர்களின் இணைப்புச் செயலாளர், உதவித் திட்டமிடல் பணிப்பாளர் மற்றும் ஏனைய அரச உத்தியோகத்தர்கள், பிரமுகர்களும் கலந்துகொண்டமையும் குறிப்பிடத்தக்கது.

அங்குரார்ப்பண நிகழ்வை அடுத்து கௌரவ பாராளுமன்ற உறுப்பினரும் அரசாங்க அதிபரும் ஷாபிநகர் பிரதேசத்தில் கைத்தறி உற்பத்திகளை மேற்கொள்ளும்  பயனாளிகளினுடைய வீடுகளுக்கு நேரடியாகச் சென்று பார்வையிட்டு அவர்களை ஊக்கப்படுத்தியமையும் விசேட அம்சமாகும்.






No comments