உயிர்த்த ஞாயிறு ஆணைக்குழு அறிக்கையில் இருந்து.....
சந்தேக நபர்களை விடுவிக்க முஸ்லிம் அரசியல்வாதிகள் அழுத்தம் வழங்கினரா? தொடர் - 8
தமிழில் ஏ.ஆர்.ஏ.பரீல்
தேவைப்படின் தன்னால் சம்பந்தப்பட்ட பகுதியின் பள்ளிவாசலுடன் தொடர்பு கொண்டு சந்தேக நபர்களின் தந்தையை தொடர்பில் எடுக்கலாம் என தாசீம் மெளலவி கூறியுள்ளார்.
அது தேவையற்றது என இலங்கை போலீஸின் சார்பில், குறிப்பிட்ட கூட்டத்தில் கலந்து கொண்ட பிரதிநிதிகள் தெரிவித்திருக்கிறார்கள்.
இதேவேளை பொலிஸ் மா அதிபர், உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் காமினி தென்னக்கோனை தொடர்புகொண்டு, அசாத் சாலியின் மொபைல் தொலைபேசி இலக்கத்தை வழங்கியுள்ளார்.
காசிம் மௌலவியின் தொலைபேசி இலக்கத்தை விட, பொலிஸ்மா அதிபர் தனது (அசாத் சாலியின்) தொலைபேசி இலக்கத்தை உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் காமினி தென்னக்கோனுக்கு வழங்கியமைக்கும் காரணம் தான் உலமா சபை மற்றும் ஸ்ரீலங்கா முஸ்லிம் கவுன்சில் என்பவற்றுடன் தொடர்புகளை ஏற்படுத்த கூடிய நபர்கள் என்பதனால் ஆகும் என அசாத்சாலி தெரிவித்தார்.
தாசிம் மெளலவி ஊடாக மாவனல்லை சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்களை கையளிக்கும் எதிர்பார்ப்பினை பொலிஸ் மா அதிபரிடம் தான் தெரிவித்ததாக கூறும் உதவி பொலிஸ் அத்தியட்சகர் காமினி தென்னக்கோனின் நிலைப்பாட்டினை நிராகரித்தார்.
என்றாலும் விசாரணை ஆணைக்குழுவின் முன்னிலையில் வழங்கப்பட்டுள்ள சாட்சியங்களின் படி 2019 ஜனவரி 3ஆம் தேதி நடைபெற்ற பாதுகாப்பு அமைச்சின் கூட்டத்திற்கு முன்பு 2018 டிசம்பர் 29 ஆம் திகதி அசாத்சாலி பொலிஸ் மா அதிபரை தொலைபேசியில் தொடர்பு கொண்டுள்ளார்.
பொலிஸ் மா அதிபர் வழங்கியுள்ள சாட்சியங்களின் படி மாவனல்லை சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் (சகோதரர்கள் ) இருவரையும் தாசின் மெளலவியின் ஏற்பாட்டின் கீழ், கையளிக்க நடவடிக்கையை முன்னெடுப்பதற்கு தன்னால் இயலும் என பொலிஸ் மா அதிபருக்கு அறிவித்துள்ளார்.
பொலிஸ் மா அதிபரிடம் இது தொடர்பில் கேள்வி கேட்பதற்கு அசாத்சாலிக்கு சந்தர்ப்பம் வழங்கப்பட்டாலும் பொலிஸ் மா அதிபரின் இந்த நிலைப்பாட்டினை அசாத்சாலி சவாலுக்கு உட்படுத்த வில்லை.
பொலிஸ் மா அதிபரின் ஆணைப்படி தான் அசாத்சாலியுடன் பேசியதாக சாட்சியமளித்த உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் காமினி தென்னக்கோன் உறுதிப்படுத்தினார் இதன் மூலம் இந்த விடயம் உறுதியாகிறது.
மாவனல்லை சம்பவத்தின் பிரதான சந்தேக நபர்களான சகோதரர்கள் இருவரும் தாசின் மெளலவி மூலம் அழைத்து வரப்படுவார்கள் என்றும் மதிய வேளையில் அவர்கள் இருவரும் ஒப்படைக்கப்படுவார் என்றும் அசாத்சாலி அவர்கருக்கு தெரிவித்தார்.
அசாத்சாலி உறுதியளித்தபடி சந்தேக நபர்கள் இவ்வாறு ஒப்படைக்கப்படவில்லை என விசாரணை ஆணைக்குழுவில் அளிக்கப்பட்ட சாட்சியங்கள் உறுதிப்படுத்தியுள்ளன.
2018 டிசம்பர் மாதம் 31ஆம் தேதி பிரதிப் பொலிஸ் மா அதிபர் அலுவலகத்தில் இடம்பெற்ற கூட்டம் ஒன்றில் உதவி பொலிஸ் அத்தியட்சகர் காமினி தென்னகோன் பிரதி பொலிஸ் மா அதிபர் பாலித சிறிவர்தனவின் ஆலோசனைக்கு அமைய அசாத் சாலியை தொடர்பு கொண்டார். சந்தேக நபர்கள் ஒப்படைக்காமைக்கான காரணத்தை வினவினார்.
அந்த தொலைபேசி உரையாடல் பின்வருமாறு:
உதவி பொலிஸ் அத்தியட்சகர் தென்னகோன்: -
அசாத்சாலி அவர்களே ஒப்படைப்பதாக கூறிய ACCUSED களை ஒப்படைக்கவில்லையே!
அசாத்சாலி :- ஹா - - இன்னும் ஒப்படைக்கவில்லையா? சிறிது பொறுங்கள்
அசாத்சாலி இது தொடர்பில் ஆச்சரியத்துக்கு உள்ளானதாக தெரிந்தது.
சந்தேக நபர்கள் பொலிஸில் ஒப்படைக்கப்பட்ட தொடர்பில் ஆச்சரியமடைந்து அசாத்சாலி தொலைபேசி தொடர்பினை கொன்ஸ்பிரன்ஸ் ஆக மாற்றி வேறு ஒருவரை தொடர்பு கொள்வதற்கு முயற்சித்தார்.
உதவி பொலிஸ் அத்தியட்சகர் காமினி தென்னக்கோன் பின்பு தொலைபேசி தொடர்பை துண்டித்தார்.
மாவனல்லை சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் இருவரும் ஒப்படைப்பதில் அசாத்சாலியின் தலையீடு தொடர்பாக தேடிபார்க்கையில் அவர், 2018 டிசம்பர் 26 ஆம் தேதி தும்மலை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகளுக்கு தொலைபேசி தொடர்புகளை ஏற்படுத்தி இருந்ததை குறிப்பிட்டாக வேண்டும்.
மாவனல்லை சம்பவம் தொடர்பில் தும்மலைசூரிய பொலிசாரினால் மொகமட் அன்சாருதீன் மொகமட் இல்மி, மொகமட் மன்சூர் மொகமட் சொனாஸ்தீன் மற்றும் முகமட் அமீர் முகமது ஆயத்துள்ளா ஆகியோர் சந்தேகத்தின்பேரில் கைது செய்யப்பட்டனர்
தும்மலை சூரிய போலீஸ் நிலையத்தின் அப்போதைய பொறுப்பதிகாரிக்கு தொலைபேசி அழைப்பு மேற்கொண்டது அசாத் சாலிக்கு ஞாபகத்தில் இல்லை என வாக்குமூலம் அளிக்கப்பட்டுள்ளது
தும்மலைசூரிய போலீஸ் நிலையத்தின் அப்போதைய பொறுப்பதிகாரியின் சாட்சியத்தின் படி, அவர் 2018 டிசம்பர் 26 ஆம் தேதி முற்பகல் 11.06 மணிக்கு அசாத்சாலியிடம் இருந்து தனக்கு அழைப்பு ஒன்று கிடைத்ததாக குறிப்பிட்டிருந்தார்.
உரையாடல் 13 செக்கனுடன் நீடித்ததுடன் சக்கரங்கள் சம்பவம் தொடர்பில் அசாத்சாலி வினவியுள்ளார். அப்போது சம்பவத்தை மிகவும் சுருக்கமாக விளக்கி உள்ளார். (தொடரும்)
(www.newstimetamil.com)






No comments