உயிர்த்த ஞாயிறு ஆணைக்குழு அறிக்கையில் இருந்து :
மாவனல்லை சிலை உடைப்பு நடந்தது எப்படி? தொடர் - 4
(தமிழில் ஏ.ஆர்.ஏ.பரீல்)
மாவனல்லை சம்பவத்தின் பிரதான சூத்திரதாரி முகம்மது இப்ராஹிம் சாதிக் அப்துல்லா அல்லது அபூ உமர் என்பவர் ஆவார். எதிர்பாராதவிதமாக உளவுப் பிரிவைச் சேர்ந்த ஒருவர் 2018 நவம்பர் மாதத்தில் கிராம அதிகாரியிடம் சென்று சாதிக் தொடர்பான விபரங்களை கோரியுள்ளார்.
அவர் ஏதும் சட்டவிரோத அமைப்புடன் தொடர்புடையவரா எனத் தேடி பார்க்கும்படியும் கிராம அதிகாரியை கோரியுள்ளார். சாதிக் மட்டும் அவரது குடும்பம் தொடர்பான தகவல்கள் பல தடவைகள் திரட்டப்பட்டுள்ளன.
இவ்வாறான தகவல்கள் 2018 டிசம்பர் மாதம் மாவனல்லையில் புத்தர் சிலைகள் உடைக்கப்படுவதற்கு முன்பு திரட்டப்பட்டன என்பது இங்கு கவனிக்கத்தக்கது.
உளவுப் பிரிவின் அதிகாரிகள் சாதிக் தொடர்பில் எச்சரிக்கையுடன் இருக்குமாறு கிராம அதிகாரியை வேண்டிக் கொண்டதை அடுத்து குறித்த பெண் கிராம அதிகாரி சாதிகின் வீட்டுக்கும் பிரதேசத்திற்கும் சென்றுள்ளார்.
சாதிக்கின் வீடு அவரது தந்தையின் வீடு இருந்த காணியிலேயே அமைந்திருந்தது. அங்கு சிறிய கோழி பண்ணை ஒன்றும் அமைக்கப்பட்டிருந்தது. கோழிப்பண்ணை குடும்பத்தின் வருமானத்திற்கு போதுமாக இருக்காததனால் சாதிக் தனது வாழ்க்கையை எப்படி நடத்துகிறார் என்பது கிராம அதிகாரிகளுக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது.
என்றாலும் தான் வேறொருவருடன் இணைந்து மாவனல்லையில் பண்ணை ஒன்றை நடாத்தி வருவதாக சாதிக் கூறினார்.
புத்தர் சிலைகளை அழிக்குமாறு தனக்கு உத்தரவிட்டதாக சாதி தெரிவித்துள்ளார். குளியாப்பிட்டியில் பொதுபல சேனா அமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்ட ஆர்ப்பாட்டம் ஒன்றில் புகைப்படத்தை காண்பித்தே சாதிக் இவ்வாறான மோசமான செயற்பாடுகளுக்கு உந்தப்பட்டுள்ளார்.
அந்த புகைப்படத்தில் "அல்லாஹ்" என்று குறிப்பிடப்பட்டு பன்றியின் படம் ஒன்றுடன் கூடிய பதாகையை ஆர்ப்பாட்டக்காரர்களால் காட்சிப்படுத்தப்பட்டுள்ளமை காண்பிக்கப்பட்டது.
மாவனல்லை சம்பவத்துடன் தொடர்புடைய கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களுக்கு பிணை பெற்றுக்கொள்வதற்காக முபீசின் மனைவிக்கு 5 லட்ச ரூபா வழங்கப்பட்டுள்ளதாக சாட்சியம் அளிக்கப்பட்டுள்ளது. இந்த பணத்தை சஹ்ரானுக்கு இல்ஹாம் வழங்கியுள்ளார்.
சஹ்ரானின் ஆலோசனைகளுக்கு அமைவாக சாதிக் மற்றும் ஷாகித் 2018 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 23 ஆம் தேதி SGB0 1117 எனும் இலக்கமுடைய அவர்களது மோட்டார் சைக்கிளில் புறப்பட்டுச் சென்று ஹிங்குலயில் புத்தர் சிலையின் தலைக்கு சேதத்தை ஏற்படுத்தியுள்ளனர்.
ரம்புக்கன வீதியில் அமைந்துள்ள மேலும் ஒரு புத்தர் சிலைக்கு 2018 டிசம்பர் மாதம் 24 ஆம் தேதி சாதிக்கினால் சேதம் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
2018 ஆம் ஆண்டு கிறிஸ்மஸ் தினத்தன்று எந்த ஒரு புத்தர் சிலையும் தாக்கப்படாமைக்கு சஹ்ரான் தனது கண்டனத்தை வெளியிட்டுள்ளார்.
அத்தோடு தொடர்ச்சியாக புத்தர் சிலைகளை அளிக்கும்படியும் கூறியுள்ளார். இதனையடுத்து சாதிக் 2018 டிசம்பர் 26 ஆம் தேதி புத்தர் சிலைகளை அளிப்பதற்காக புறப்பட்டுச் செல்வதற்கு SLGISM இல் இருந்து தான் அறிந்த நண்பர்கள் நாள்வரை ஏற்பாடு செய்துள்ளார்.
தாக்கல் சம்பவம் தோல்வியில் முடிந்தது தொடர்பில் சாதிக்கு, சஹ்ரானுக்கு அறிவித்ததை அடுத்து, உடனடியாக தனது வீட்டிலிருந்து வெளியேறி குருநாகல்லுக்குச் செல்லுமாறு அவர் ஆலோசனை வழங்கியுள்ளார்.
சாதிகளில் குருநாகல்லில் இருக்கும் போது, சஹ்ரான், சாதிக்கை பம்மன பகுதிக்கும் பின்பு வேறு வீடொன்றுக்கும் அனுப்பி வைத்துள்ளார்.
வீட்டின் உரிமையாளர், சாதிக் மற்றும் அவரது மனைவி, மகனுக்கும் முதலாவது இரவு தங்கி இருப்பதற்கு அனுமதி வழங்கியுள்ளார்.
என்றாலும் மாவனல்லை சம்பவம் தொடர்பில் ஊடகங்களில் செய்தி வெளிவந்ததை அடுத்து வீட்டு உரிமையாளர்களுக்கு அவர்கள் தொடர்பில் சந்தேகம் எழுந்துள்ளது.
இதனை அடுத்து சஹ்ரான் தான் தங்கியிருக்கும் குளியாப்பிட்டி வீட்டுக்கு வருமாறு ஆலோசனை வழங்கியுள்ளார். அங்கு வைத்து சாதிகின் உடைய முச்சக்கர வண்டி, சாவி மற்றும் ஆவணங்கள் மேலும் சாதிகின் மொபைல் தொலைபேசி என்பவற்றை தனது பாதுகாப்பில் வைத்துக் கொண்டார் ( தொடரும்)
www.newstimetamil.com






No comments